தமிழ் பக்கத்தின் பிரதான அனுசரணையில் நண்பர்கள் பிரீமியர் லீக் இன்று நடந்து முடிந்தது.
இணுவில் இந்துக்கல்லூரி மைதானத்தின் இன்று இறுதிப் போட்டி நிகழ்வுகள் நடந்தன.
ரெட் ட்ராகன்ஸ், கரிகாலன், தண்டவூட்ஸ், ப்ளக் ஸ்குவாட் அணிகள் இந்த தொடரில் பங்கேற்றன.
இறுதிப் போட்டியில் கரிகாலன் அணியும், தண்டவூட்ஸ் அணியும் மோதின. தண்டவூட்ஸ் அணி 104 ஓட்டங்களை பெற்றது. பதிலளித்து ஆடிய கரிகாலன் அணி 41 ஓட்டங்களிற்கு ஆட்டமிழந்தது.
நண்பர்கள் பிரீமியர் லீக் சீசன் 1 இல், 239 ஓட்டங்களை பெற்ற தண்டர்வூட்ஸ் அணியின் வினோத சர்மா சிறந்த துடுப்பாட்ட வீரராக தெரிவானார்.17 விக்கெட்டுக்களை வீழ்த்திய வினோத், சிறந்த பந்துவீச்சாளராக தெரிவானார்.
239 ஓட்டங்களையும், 14 விக்கெட்டுக்களையும் கைப்பற்றிய வினோத சர்மா தொடர் நாயகன் விருதை வென்றார்.
சிறந்த சகலதுறை வீரராக தண்டர்வூட்ஸ் அணியின் யதுசன் தெரிவானார்.
சிறந்த களத்தடுப்பாளராக ரெட் ட்ராகன்ஸ் அணியை சேர்ந்த பிரவீன் தெரிவானார்.