வங்காலை படுகொலை நினைவு

Date:

நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தும், உயிரிழந்த மக்களின் உடல்களை மீட்டு அடக்கம் செய்யவும்,பல்வேறு மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டு வந்த மன்னார் வங்காலை புனித ஆனாள் ஆலய பங்குத்தந்தை அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளார் கடந்த 1985 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6 ஆம் திகதி அரச படைகளால் படுகொலை செய்யப்பட்டார்.

மேலும் அவருடன் பொது மக்களும் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் மன்னார்- வங்காலை யில் கடந்த 06-01-1985 திகதி படுகொலை செய்யப்பட்ட அமரர் அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளாரின் 38 ஆம் ஆண்டு நினைவு இன்று வெள்ளிக்கிழமை(6) வங்காலை புனித ஆனாள் ஆலயத்தில் நினைவு கூறப்பட்டது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (6) காலை இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இதன் போது படுகொலை செய்யப்பட்ட அமரர் அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளாரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

இதன் போது அருட்தந்தையுடன் சேர்ந்து இன்னுயிர் நீத்த உறவுகளுக்கு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து வங்காலை பங்குத்தந்தை அருட்பணி ஜெயபாலன் அடிகளாரின் தலைமையுரையில் அமரர் மேரி பஸ்ரியன் அடிகளாரின் குருத்துவ சமூகப் பணி வாழ்வு குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளார் மற்றும் அவருடன் சேர்ந்து உயிர் நீத்தவர்களின் 38 வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி இரத்ததான நிகழ்வும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

நேபாளை உலுக்கிய பேரழிவு: 162 பேர் பலி; 400க்கும் மேற்பட்டோர் மாயம்

நேபாளில் பேரழிவு: 162 பேர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்கானோர் மாயம் நேபாளத்தின் வடக்குப் பகுதியில்,...

கல்முனையில் சிறப்பாக நடைபெற்ற மீலாத் ஊர்வலம் – பொலிஸார் ஒத்துழைப்பு

உத்தம நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, சுன்னத்வல்...

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான போராட்டத்தில் மரணிக்கவும் தயார்-தம்பிராசா செல்வராணி

எமது உறவுகளை இழந்து தவிக்கும் எங்களுக்கு நிதி உதவி தேவை தான்....
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்