29.3 C
Jaffna
March 29, 2024
மலையகம்

இ.தொ.கா தனித்தே போட்டியிடும்!

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சேவல் சின்னத்தில் தனித்து  போட்டியிட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

இ.தொ.கா.வின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தலைமையில், சிரேஷ்ட தலைவர்கள் மற்றும் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் கணபதி கனகராஜ் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இ.தொ.கா ஒவ்வொரு தேர்தல்களிலும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியாகவே போட்டியிட்டதாகவும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கட்சி சின்னத்தில் போட்டியிடுவதன் மூலம் அரசியல் அரங்கில் அதன் நிலையை தீர்மானிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இ.தொ.கா தனித்து கட்சி சின்னத்தில் போட்டியிடும் போது ஏனைய அரசியல் கட்சிகள் பெற்ற வாக்குகளின் வீதம் ஓரளவு குறையும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியாக போட்டியிடுவது இ.தொ.கா.வுக்கு பாதகமானது என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உயிரிழந்தவரின் நுரையீரலில் பல்

Pagetamil

சாரதி இலேசாக தூங்கி விட்டாராம்!

Pagetamil

சட்டவிரோத மின்கம்பி வேலியில் சிக்கி ஒருவர் பலி

Pagetamil

விபரீதத்தில் முடிந்த காதல்: 44 வயது ஆசிரியைக்கு கத்தியால் குத்திய 45 வயது ஆசிரியை!

Pagetamil

விபத்தில் இளைஞன் பலி

Pagetamil

Leave a Comment