2வது ரி20 போட்டியில் முதலில் ஆடிய இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 206 ஓட்டங்களை பெற்றது.
இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய களத்தடுப்பை தெரிவு செய்தது.
இலங்கை அணியின் தொடக்கம் அமர்களமாக அமைந்தது. ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி குசல் மென்டிஸ்- பதும் நிசங்க, 8 ஓவர்களில் 80 ஓட்டங்களை குவித்தனர். 8.2 ஓவரில், 31 பந்துகளில் 52 ஓட்டங்களுடன் குசல் மென்டிஸ் வீழ்ந்தார்.
மந்தமாக ஆடிய பதும் நிசங்க 35 பந்துகளில் 33 ஓட்டங்களில் வீழ்ந்தார். அதை தொடர்ந்து, அடுத்த விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து விழுந்தன. பானுக ராஜபக்ச 2, தனஞஜெய டி சில்வா 3, ஹசரங்க 0 என நடையை கட்டினர்.
அதிரடியாக ஆடிய அசலங்க 19 பந்துகளில் 37 ஓட்டங்கள் குவித்தார்.
கடைசிக்கட்டத்தில் அணித்தலைவர் தசுன் சானக அதிரடி காட்டினார். 22 பந்துகளில் 6 சிக்சர்கள், 2 பவுண்டரிகளுடன் 56 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
கடந்த போட்டியில் 4 விக்கெட் கைப்பற்றிய இந்திய பந்து வீச்சாளர் சிவம் மாவிக்கு இன்று கெட்ட காலம். 4 ஓவர்கள் வீசி 53 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்தார்.
உம்ரான் மாலக் 48 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.




