‘நேசத்தை வெளிப்படுத்த பயப்பட வேண்டாம்’: மகனுக்கு தாயார் ஆறுதல்!

Date:

“நேசிக்கவும், அதனை வெளிப்படுத்தவும் பயப்பட வேண்டாம்” என்று கிருத்திகா உதயநிதி கருத்துப் பகிர்ந்துள்ளார்.

தமிழக விளையாட்டுத் துறை அமைச்சரும், திமுக இளைஞரணித் தலைவருமான உதயநிதியின் மகன் இன்பநிதி தனது தோழியுடன் இருப்பது போன்ற தனிப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக்கப்பட்டு வருகின்றன.

இன்ப நிதியை விமர்சிக்கும் வகையில் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதேநேரத்தில், மற்றொரு தரப்பினர் ‘இது இன்பநிதியின் தனிப்பட்ட வாழ்க்கை. இதை விமர்சித்துப் பகிர யாருக்கும் உரிமை இல்லை’ என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், எதைப் பற்றியும் குறிப்பிடாமல் இன்பநிதியின் தாயார் கிருத்திகா உதயநிதி ட்வீட் செய்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நேசிக்கவும், அதை வெளிப்படுத்தவும் பயப்பட வேண்டாம். இயற்கையை அதன் முழு மேன்மையுடன் புரிந்துகொள்வதற்கான வழிகளில் இதுவும் ஒன்று” என்று பதிவிட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

யாழ்ப்பாண நகரில் இலங்கைப் படையினர் சோள வியாபாரம் – சொந்த நிலத்திற்கு செல்ல முடியாமல் வலி வடக்கு மக்கள் அவதி!

​யாழ்ப்பாண நகரில்  சோள வியாபார நடவடிக்கைகளில் இலங்கைப் படையினர் ஈடுபட்டு வருவதால்...

வலிகாமம் வடக்கு சபைக்கு நீதிமன்ற நிவாரணம்

தையிட்டி திஸ்ஸ விகாரையால் ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதி விடுவிப்புக்கு முயற்சித்த வலிகாமம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்