தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடுவது பற்றி வரும் 7ஆம் திகதி மட்டக்களப்பில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். இது தொடர்பில் அரசியல்குழுவில் ஒரு சிபாரிசை செய்துள்ளது. இறுதி முடிவு மத்திய செயற்குழுவிலேயே எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இன்று (4) யாழில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடுவதில்லையென அரசியல்குழுவில் முடிவெடுக்கப்பட்டதாக, எம்.ஏ.சுமந்திரன் முன்னர் தெரிவித்திருந்தார். எனினும், அவ்வாறான முடிவு எடுக்கப்படவில்லையென கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா உள்ளிட்டவர்கள் தெரிவித்ததை தொடர்ந்து, எம்.ஏ.சுமந்திரனின் சுருதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதுதவிர, இன்றைய செய்தியாளர் சந்திப்பில்,
உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் திகதி அறிவிக்கப்பட்டாலும், தேர்தலை பிற்போட சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக்கூடும். அப்படியான நடவடிக்கைகள் எடுத்தால் உடனடியாக நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் தெரிவித்தார்.