இன்று 60 இற்கு மேற்பட்ட புகையிரத சேவைகள் இரத்தாகலாம்!

Date:

இன்று (02) 60க்கும் மேற்பட்ட புகையிரதங்கள் ரத்து செய்யப்படலாம் என புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

31 டிசம்பர் 2022 முதல் கிட்டத்தட்ட 500 புகையிரத திணைக்கள ஊழியர்கள் ஓய்வு பெற்றதால் இந்தச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

“நேற்று, 44 புகையிரத பயணங்கள் ரத்து செய்ய திட்டமிடப்பட்டது. இதுவரை 7 பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது இரு மடங்காக அல்லது மூன்று மடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளது. நாளை அது 60 முதல் 70 வரை இருக்கலாம்” என புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.

பயணிகள் நாளை புகையிரத நிலையங்களுக்கு வந்து புகையிரதங்களை இயக்கக் கோருவதால் மோதல்கள் ஏற்படலாம் என அவர் மேலும் எச்சரித்தார்.

“இந்த நிலை மாதத்தின் முதல் நாளில் – ஆண்டின் முதல் நாளில் ஏற்படும் என்று உறுதியாகச் சொல்லலாம். பணியிடங்களுக்கு செல்லும் பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுவர்,” என மேலும் எச்சரித்தார்.

ஓய்வுபெற்ற ஊழியர்களின் சேவைகளை ஒப்பந்த அடிப்படையில் தேவைக்கேற்ப பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், நிலைய பொறுப்பதிகாரிகளின் பற்றாக்குறையை போக்க புதிய நிலைய அதிபர்கள் நியமிக்கப்பட்ட போதிலும், அவர்களது பதவிகள் உறுதி செய்யப்படவில்லை. இதன்காரணமாக மாத்தறைக்கும் பெலியத்தவிற்கும் இடையிலான புகையிரத நிலையங்கள் எதிர்வரும் காலங்களில் மூடப்பட வேண்டியிருக்கும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

எதிர்வரும் வாரத்திற்குள் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால், நிலைய அதிபர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

‘விமானத்தை வீழ்த்த விரும்பினேன்… சாவுக்கு அஞ்சவில்லை’: துணை விமானி ‘பகீர்’!

பெரும்பாலும் இஸ்ரேலியர்களான 170-க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற பயணிகள் விமானத்தை, கப்டன்...

ஒக்டோபர் இறுதிக்குள் முத்தரப்பு பேச்சுவார்த்தை: ஜெலென்ஸ்கி

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதிய சுற்றுப்...

பேஸ்புக் நண்பரால் அடித்துக்கொல்லப்பட்ட இளைஞன்

ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான நண்பருடன் ஏற்பட்ட தகராறின் போது தடியால் தாக்கப்பட்டதில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்