2023 இல் என்ன நடக்கும்?: பாபா வங்காவின் பீதியூட்டும் கணிப்புக்கள்!

Date:

புத்தாண்டு பிறந்த மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களில் எல்லோரும் திளைத்திருப்பார்கள். இந்த சமயத்தில், தீர்க்கதரிசனங்களை நம்புபவர்களிற்கு கவலையூட்டும் விதமான பாபா வங்காவின் கணிப்புக்களும் ஒரு பக்கம் வைரலாகி வருகிறது.

பாபா வங்காவின் கணிப்புக்களை நீங்கள் நம்புபவர் என்றால், 2023ஆம் ஆண்டு கொஞ்சம் கவலையடைய வேண்டிய விசயங்களும் உள்ளன.

பாபா வங்காவின் பெயர் சர்வதேச அளவிலான நிகழ்வுகளை தொடர்ந்து கண்காணிக்கும் நபர்களுக்கு நன்கு பரிச்சயமான ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. பல்கேரியா நாட்டை சேர்ந்தவர். பார்வையற்றவர். சிறு வயதில் மிக மோசமான புயலில் சிக்கி காணாமல் போனார். அதன்பிறகு என்ன ஆனார் என்றே தெரியவில்லை. பல நாட்களுக்கு பின்னர் குடும்பத்தினரால் கண்டெடுக்கப்பட்டார்.

அப்போது அவரது இரு கண்களிலும் அதிகப்படியான மண் தாக்கி பார்வையிழந்தார். இதன் பின் எதிர்காலத்தை கணிக்கும் சக்தியை பெற்றதாக கூறினார். எதிர்காலத்தை பற்றிய அவரது கணிப்புக்கள் 85 சதவீதம் சரியாக இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ’நாஸ்ட்ரடாம்ஸ்’ என்றும் அழைத்தனர்.

குறிப்பாக செர்னோபில் அணு உலை விபத்து, பிரிட்டன் இளவரசி டயானா மரணம், சோவியத் யூனியன் கலைப்பு, அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் உள்ளிட்டவற்றில் அவரது கணிப்பு சரியாக இருந்தாக கூறப்படுகிறது..

1996ஆம் ஆண்டு தனது 84வது வயதில் காலமானார்.

2022 ஆம் ஆண்டில் வெள்ளம், வரட்சி அழிவு வருமென அவர் கணித்திருந்தார். இங்கிலாந்து உட்பட பல நாடுகள் கோடையில் வறட்சியை சந்தித்தன, அதே நேரத்தில் அவுஸ்திரேலியா மற்றும் ஆசியா கடுமையான வெள்ளத்தை சந்தித்தன.

அவரது கணிப்பின் படி, இந்த ஆண்டு அணுசக்தி பேரழிவு ஏற்படலாம்.

ஒரு மின் உற்பத்தி நிலையம் பெரிய வெடிப்பிற்குள்ளாகலாம். இதனால், ஆசியாவில் நச்சு மேகங்கள் உருவாகும். காற்றில் நச்சு கலப்பதால் கடுமையான நோய்கள் பரவி பல நாடுகள் பாதிக்கப்படலாம் என்று பாபா வங்கா கணித்தார்.

ரஷ்யா- உக்ரைன் போர் தற்போது நடந்து வருகிறது.  உக்ரைன் மீது அணுகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்திருந்தார்.

அதைவிட முக்கியமாக, உக்ரைனின் Zaporizhzhya அணுமின் நிலையம் மோதல் வலயத்தில் உள்ளது. அங்கு நிலை கொண்டுள்ள ரஷ்ய படைகள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்துவதாக ரஷ்யா குற்றம்சுமத்துகிறது. ரஷ்யா தாக்குதல் நடத்துவதாக உக்ரைக் குற்றம் சுமத்துகிறது. எப்படியோ, அங்கே தொடர்ந்து தாக்குதல் நடந்து வருவதால், அணுசக்தி பேரழிவு குறித்து ஐ.நாவும் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில், பாபா வங்காவின் அணு மின் நிலைய வெடிப்பு எச்சரிக்கை பீதியை கிளப்பியுள்ளது.

இதேவேளை, இந்த ஆண்டு உயிரியல் தாக்குதல் ஒன்று நடத்தப்படலாம் என்றும் எச்சரித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டில் சூரிய சுனாமி ஏற்படலாம், அதனால் பூமியின் காந்த கவசம் அபாயகரமானதாக அழிக்கப்படும் என்றும் கணித்துள்ளார்.

பாபா வங்காவின் கூற்றுப்படி, சூரிய சுனாமியால் பூமி இருளில் மூழ்கும்.

சூரிய புயல்கள் சூரியனிலிருந்து நேரடியாக பூமிக்கு அணுகுண்டுகளைப் போல சக்திவாய்ந்த மின்சார அலைகள அனுப்பும், இதனால் நாம் மீண்டும் இருண்ட காலங்களுக்குச் செல்லலாம்.

ஏலியன் தாக்குதல்

பாபா வங்காவின் கூற்றுப்படி, 2023 இல் ஏலியன்கள் பூமியின் மீது படையெடுக்கலாம் இந்த படையெடுப்பைத் தொடர்ந்து பூமி இருளில் மூழ்பும். பூமியின் சுற்றுப்பாதை ‘மாறலாம்’ என்று மற்றொரு கணிப்பில் அவர் மேலும் கூறினார்.

இது நடந்தால், பூமியின் காலநிலை பெருமளவில் மாறும்.

பூமி சூரியனுக்கு அருகில் நகர்ந்தால், அது அதிகரித்த கதிர்வீச்சு மற்றும் வானளாவிய வெப்பநிலையை சந்திக்கும்.

அது விலகிச் சென்றால், உலகம் அதிக மணிநேர இருளுடன் பனி யுகமாக இறங்கக்கூடும்.

ஆய்வகத்தில் வளர்ந்த மனிதர்கள்

அவரது கணிப்பின் படி, இயற்கையான முறையில் குழந்தை பெற்று கொள்வது மாறி ஆய்வகங்களில் குழந்தை பெறும் நிலை உண்டாகும். வாடகை தாய் முறை முடிவுக்கு வந்துவிடும். இவர்களே வருங்கால குடிமக்களாக இருப்பர்.

குழந்தைகளின் தோற்றத்தை தெரிவு செய்ய முடியும். மஞ்சள் நிற முடி, பச்சைக் கண்கள் போன்ற தோற்ற தெரிவுகள் மாத்திரமல்ல, குழந்தைகளின் குணாதிசயங்கiளயும் தெரிவு செய்து, ஆய்வகத்திலிருந்து குழந்தைகளை உருவாக்கும் காலம் வருமென கணித்துள்ளார்.

இவை எந்த அளவிற்கு பலிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

வரும் 5079ஆம் ஆண்டு வரை பல்வேறு கணிப்புகளை பாபா வங்கா வெளியிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மீனவரின் வலையில் சிக்கிய சடலம்

மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழ் வாவியில் மீனவர் வலையில் சிக்கிய நிலையில்...

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட மேலதி வரி குறித்து விளக்கம்!

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி (Surcharge) குறித்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்