காதலிற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தால் 22 வயது யுவதி தற்கொலை: சடலத்திற்கு தாலி கட்டிய காதலன்!

Date:

காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால், இளம் யுவதி தற்கொலை செய்து கொண்டார். மரண வீட்டிற்குள் புகுந்து காதலியின் சடலத்திற்கு காதலன் தாலி கட்டியுள்ளார்.

மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

மாமாங்கம் பகுதியை சேர்ந்த செல்வரெட்ணம் யோதிகா என்ற யுவதி, பாடசாலை  காலத்திலிருந்தே சக மாணவன் ஒருவரை காதலித்து வந்துள்ளார். கடந்த சில வருடங்களாக அவர்களின் காதலிற்கு யோதிகாவின் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்துள்ளது.

இதையடுத்து, நேற்று முன்தினம் (29) யோதிகா தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

அவரது சடலம் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில், காதலன் நண்பர்களுடன் அங்கு சென்று, யோதிகாவின் சடலத்திற்கு தாலி கட்டினார். குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்த போதும், அவர் தாலி கட்டினார்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

திருக்கோவில் 7கிராம் 199 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட வியாபாரிக்கு 14 நாள் விளக்கமறியல்

திருக்கோவில்  பிரதேசத்தில் 7 கிராம் 199 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளுடன்...

இலங்கை எல் நினோ காலநிலைக்குள் நுழைந்தது

இலங்கை தற்போது எல் நினோ (El Niño) காலநிலை தாக்கத்தின் கீழ்...

TEEN விபத்துகள் அதிகரிப்பு; சுகாதார அதிகாரிகள் கவலை

பதின்ம வயதினரிடையே அதிகரித்து வரும் விபத்துகள் குறித்து சுகாதார அதிகாரிகள் தீவிர...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்