யாழ் மாநகரசபை முதல்வர் பதவியை துறந்துள்ளார் வி.மணிவண்ணன்.
சற்று முன்னர் உள்ளூராட்சி உதவி ஆணையாளருக்கு பதவிவிலகல் கடிதத்தை அனுப்பினார்.
யாழ் மாநகரசபையின் 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் முதலாவது தடவை தோற்கடிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது முறையாக அடுத்த வாரம் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. எனினும், அதற்கு போதிய ஆதரவில்லாததால் பதவிவிலகினார்.
நாளை மறுநாள் (1) முதல் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.