காதலியில் சந்தேகம்: போலி பெயர் பேஸ்புக்கில் காதலியை பரிசோதித்த காதலன்; நள்ளிரவில் இளம் பெண் படுகொலை!

Date:

காதலியுடன் போலி பேஸ்புக் கணக்கின் மூலம் அரட்டையடித்து,  நள்ளிரவில் அவரை வீட்டுக்கு வெளியில் அழைத்து கழுத்தை அறுத்து கொன்றுள்ளான் சைக்கோ காதலன்.

ஒரே சமயத்தில் இரண்டு காதலர்களுடன் கடலை போட விரும்பிய 17 வயதான இளம்பெண்ணே கொல்லப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் வடசேரி கரையைச் சேர்ந்த சங்கீத நிவாஸ் சங்கீதா (17)  என்பவரே கொல்லப்பட்டார். நள்ளிரவில் வீட்டு கதவை தட்டும் சத்தம் கேட்டு தந்தை எழுந்து வெளியில் வந்த போது, கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சங்கீதா பேச முடியாமல் தரையில் இருந்தார். நடுங்கும் கைகளை உயர்த்தி ஏதோ சொல்ல முயன்றதாக தந்தை தெரிவித்தார்.

மகள் இரத்த வெள்ளத்தில் இருப்பதை பார்த்த தந்தை ஓடிச்சென்று கட்டியணைத்தார். சங்கீதாவை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும், அவர் உயிரிழந்து விட்டார்.

காதலர்களிடையே ஏற்பட்ட சந்தேகத்தினால் இந்த விபரீதம் நிகழ்ந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

பள்ளிக்கல் பகுதியைச் சேர்ந்த கோபு (20) என்ற இளைஞருக்கும், சங்கீதாவிற்கும் பேஸ்புக் மூலம் அறிமுகமாகி காதல் மலர்ந்துள்ளது.

திவ்யா நள்ளிரவு நேரங்களிலும் பேஸ்புக்கில் இருப்பதால், அவர் வேறு சில நபர்களுடன் பேஸ்புக்கில் தொடர்பில் இருப்பதாக கோபு சந்தேகப்பட்டார். நள்ளிரவிலும் ஆன்லைனில் இருக்கிறாயே என்று கோபு கேட்டதற்கு, அப்படி இல்லவே இல்லை என்று திவ்யா மறுத்துள்ளார். வேறு யாருடனாவது பழகுகிறாயா, மெசேஜ் செய்கிறாயா? என்று கோபு கேட்டதற்கும், திவ்யா அதற்கும் மறுப்பு சொல்லி உள்ளார்.

கோபுவுக்கு சந்தேகம் தீரவில்லை. காதலியை சோதித்து பார்க்க விரும்பினார்.

அகில் என்ற பெயரில் போலி பேஸ்புக் கணக்கு ஆரம்பித்து, சங்கீதாவுக்கு பேஸ்புக்கில் நட்பு அழைப்பு விடுத்தார். சங்கீதாவும் அவரது நட்பை ஏற்றதுடன், வழக்கம்போல் மெசேஞ்சரில் சட்டிங் செய்ய தொடங்கி உள்ளார்.

சில நாட்களில் சங்கீதாவை காதலிப்பதாக அகில் கூறியுள்ளார்.  திவ்யா, தானும் காதலிப்பதாக அகிலிடம் சொல்லி உள்ளார்.

ஒருநாள் சங்கீதாவை நேரில் பார்க்க வேண்டும் என்று அகில் சொல்லவும், சங்கீதாவும் அன்றைய தினம் இரவே தன்னுடைய வீட்டிற்கு பக்கத்தில் வருமாறு அகிலிடம் சொல்லி உள்ளார்.

நள்ளிரவிவு 1.30 மணியளவில் வீட்டில் அனைவரும் தூங்கியபிறகு, சகோதரிக்கு மட்டும் தகவல் சொல்லி விட்டு, கதவை திறந்து கொண்டு வெளியேறியுள்ளார் சங்கீதா.

தலையில் ஹெல்மட் அணிந்து பைக் மீது உட்கார்ந்திருந்தவரை பார்த்ததும், கோபுவாக இருக்குமோ என்ற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டது. கோபுவா என கேட்டுள்ளார்.

அவர் ஹெல்மெட்டை கழற்றியுள்ளார். அப்போதுதான் அது தன்னுடைய காதலன் கோபு என்பதை அறிந்து சங்கீதா அதிர்ச்சி அடைந்தார். நள்ளிரவு நேரத்தில் முன்பின் தெரியாத ஒருத்தனை இப்படித்தான் வந்து பார்ப்பதா? காதலன் நான் இருக்கும்போது, இன்னொருவனை சந்திப்பதற்காக நள்ளிரவில் வீட்டை விட்டு வரும் அளவிற்கு உனக்கு தைரியமா? என்று கேட்ட கோபு, கையோடு கொண்டு வந்திருந்த கத்தியால், சங்கீதாவின் கழுத்தை அறுத்துள்ளான்.

வீட்டு கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டு, தந்தை எழுந்து கதவை திறந்த போது, மகள் இரத்த வெள்ளத்தில் பேச முடியாமல் தரையில் உட்கார்ந்திருந்தார்.

உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரையும் விட்டுவிட்டார்.

spot_imgspot_img

More like this
Related

சவுதி அராம்கோ ஹெலிகாப்டர் விபத்து: 14 உயிர்களை காவுகொண்ட பேரதிர்ச்சி

சவுதி அரேபியாவில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக...

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திய நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரும் யோசனையை அரசு பரிசீலனை

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கான...

முதியோர் கொடுப்பனவை மீள வழங்க சிறப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்

தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாத காரணத்தால் மாதாந்திர முதியோர் கொடுப்பனவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்