பெப்ரவரி 17 இல் யாழ் வருகிறார் ரணில்!

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றுதலோடு 75 வது சுதந்திரதின கொண்டாட்டம் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இடம் பெற உள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார்

ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் மூன்று முக்கியமான நிகழ்வுகள் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

சுதந்திரதின நிகழ்வு பெப்ரவரி நான்காம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது. இதை தொடர்ந்து மாகாண மட்டத்தில் நிகழ்வுகள் நடக்கவுள்ளது.

இதன்படி, பெப்ரவரி 17ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு இருக்கின்ற கலாச்சார மத்திய நிலையத்தில் அதனுடைய ஒரு முழுமையான செயல்பாட்டு நிகழ்வோடு சுதந்திர விழா ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன

அதற்கான ஆரம்ப கலந்தரையாடல் இன்று முன்னெடுக்கப்பட்டது. கலாச்சார மத்திய நிலைத்தினுடைய ஒரு இணைப்பு முகாமைத்துவ குழுவில் இருக்கிற ஆளுநர் மற்றும் இந்திய துணை தூதுவரத்தின் அதிகாரிகள் மற்றும் யாழ் மாநகர சபையின் அதிகாரிகள் மத்திய கலாச்சார அமைச்சுடன் இணைந்ததாக கலாச்சார மத்திய நிலையத்தில் கலாச்சார நிகழ்வுகளை நடத்துவற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கலந்து கொள்ள உள்ளதால் பெரியளவில் நிகழ்வுகள் இடம்பெற்றவுள்ளதாக தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் புதிய அதிபராக அருட்தந்தை லெபோன் சுதன் கடமையேற்பு

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் புதிய அதிபராக இலங்கை...

பஸ் லலித் விசாரணையில் கக்கியவை!

டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி லலித் கண்ணங்காரவிடம் நடத்தப்பட்ட...

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

கைதான மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்