முல்லைத்தீவு – மாஞ்சோலை பகுதியில் மாணவி ஒருவர் வாகனத்தில் இருந்து குதித்து விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு முறிப்பை சேர்ந்த 15 வயது மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 23ஆம் திகதி முறிப்பில் இருந்து பாடசாலை நிகழ்விற்காக மாஞ்சோலை செல்வதற்காக வாகனமொன்றை மறித்து, மாணவன் ஒருவரும், மாணவியொருவரும் ஏறியுள்ளனர்.
மாணவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்தும் வாகனம் நிற்காமல் சென்றுள்ளது.
இந்த நிலையில் நீராவிப்பிட்டி முதன்மை வீதியில் வாகனம் பயணித்துக்கொண்டிருக்கும் போது வாகனத்தில் இருந்து மாணவி குதித்துள்ளார். அதனைத் தொடர்ந்து மாணவனும் வாகனத்தில் இருந்து குதித்துள்ளார்.
மாணவர்கள் வாகனத்தில் இருந்து குதித்தது கூட தெரியாத நிலையில் வாகனத்தின் சாரதி வாகனத்தினை ஓட்டிச் சென்றுள்ளார்.
இந்த விபத்தில் தலையில் படுகாயமடைந்த முறிப்பு பகுதியினை சேர்ந்த 15 வயதுடைய மாணவி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை பலனின்றி மீண்டும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
இவரது சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.




