தமிழ் அரசு கட்சி தனித்து போட்டியிடும் முடிவு நிராகரிப்பு: கூட்டமைப்பாகவே போட்டியிடும்!

Date:

இலங்கை தமிழ் அரசு கட்சி தொடர்ந்தும் இதேவிதமாக செயற்பட்டால் உடுப்பிட்டி தொகுதியில்- எம்.ஏ.சுமந்தினின் தொகுதி- ஏற்பட்ட கதிதான், அனைத்து தொகுதியிலும் ஏற்படும் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் அரசியல்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் அரசியல் செயற்குழு கூட்டம் நேற்று (26) மாலை இணையவழியில் நடைபெற்றது.

இதில், எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில், 3 பங்காளிக்கட்சிகளும் இணைந்து, தமிழ் தேசிய கூட்டமைப்பாகவே தேர்தலில் போட்டியிடுவது என தீர்மானிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தின் போது, உள்ளூராட்சி தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி ஆராயப்பட்டது.

இலங்கை தமிழ் அரசு கட்சி தனித்து போட்டியிடுவதை பற்றி, அந்த கட்சியின் பிரமுகர்கள் சிலர் பகிரங்கமாக கருத்து தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், நேற்று இந்த விடயம் ஆராயப்பட்டது.

கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலானவர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பாகவே போட்டியிடுவது என கருத்து தெரிவித்தனர்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, மூத்த துணைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் உள்ளிட்ட பலர் இதனை தெரிவித்தனர். 3 பங்காளிக்கட்சிகளும் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பாகவே போட்டியிடுவது என தீர்மானிக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராகுல ராஜபுத்திரன் மட்டும் மாறான கருத்து தெரிவித்தார். மட்டக்களப்பில் அதற்கு மாறான கருத்து இருப்பதாக தெரிவித்தார்.

இதன் போது சாணக்கியனை தெளிவுபடுத்தி, சட்டத்தரணி கே.வி்.தவராசா கருத்து தெரிவித்தார்.

அனந்தி, அருந்தவபாலன் உள்ளிட்ட பலரை தமிழ் அரசு கட்சிதான் வெளியேற்றியது. எல்லோரும் பிரிந்து செல்கிறார்கள். ஆரம்பத்தில் 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். பின்பு 16 ஆகி, இப்பொழுது 10 ஆகியுள்ளது. கூட்டமைப்பு இப்பொழுது தேய்பிறையாகி, அமாவாசையை நோக்கி செல்வது போலுள்ளது. இதனால் ஏற்படப்போகும் இருள் கட்சிக்கு மாத்திரமல்ல, தமிழ் மக்களிற்கும் தான். எமது கட்சி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் உடுப்பிட்டி தொகுதியில் 3ஆம் இடத்தையே பெற்றது. சிங்கள தேசியக்கட்சி முதலிடம் பெற்றது. நாம் இன்னும் பிரிந்து பிளவுபட்டு நின்றால்  உடுப்பிட்டி தொகுதி முடிவுதான், அனைத்து தொகுதிகளிலும் ஏற்படும். ஆகவே, அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் இணைந்தே தேர்தலை சந்திக்க வேண்டும்.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பிரச்சனைகளில் தலையிடாமல், தீர்க்க முடியாமல் உள்ள பலவீனம்தான் பல பிரச்சினைகளிற்கு காரணமாக உள்ளது. ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான்தோன்றித்தனமாக செயற்படுவதே பிரச்சினைக்கு காரணம். எதிர்காலத்தில் நிபுணத்துவ குழுவை உருவாக்கி, கட்சியை ஜனநாயகப் படுத்துவோம். தமிழ் அரசு கட்சியை சீராக்கிவிட்டு, ஏனைய தரப்புக்களை விமர்சிப்பதே பொருத்தமானது என்றார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன், உடுப்பிட்டி, கரவெட்டி, பருத்தித்துறை தெர்குதிகளை சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடி பல பிரச்சினைகளை தீர்த்துள்ளதாகவும், ஒழுங்கமைத்து வருவதாகவும் தெரிவித்தார். வல்வெட்டித்துறை நகரசபையில் ஏற்பட்ட குழப்பங்கள் போன்ற காரணங்களினால்தான் உடுப்பிட்டி தொகுதியில் வீழ்ச்சியேற்பட்டதாக அந்த தொகுதிகளை சேர்ந்தவர்கள் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.

spot_imgspot_img

More like this
Related

தாய்ப்பாசத்தில் நாமலை அடித்துக்கொள்ள ஆளே கிடையாதாம்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி...

பல மாதங்களாக காணாமல் போயிருந்த 15 வயது சிறுமி அடர்ந்த காட்டு குகையில் கைக்குழந்தையுடன் மீட்பு

சுமார் ஐந்து மாதங்களாகக் காணாமல் போயிருந்த 15 வயது சிறுமி ஒருவரை,...

ரஷ்யாவிற்கு பிராந்தியங்களை விட்டுக்கொடுப்பதற்கு ஈடாக உக்ரைன் நேட்டோவில் சேரும் வாய்ப்பு: அமெரிக்கா புதிய முன்மொழிவு!

நவம்பர் 13 அன்று உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறுகையில், டான்பாஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்