மோட்டார் சைக்கிள் சில்லில் சேலை சிக்கியதால் பறிபோனது பெண்ணின் உயிர்!

Date:

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பப் பெண்ணொருவர் விபத்துக்குள்ளாகி நேற்று முன்தினம் (25) உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணும் அவரது மகளும் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை அவரது புடவை மோட்டார் சைக்கிள் சில்லுக்குள் சிக்குண்டு விபத்து சம்மவித்ததனால் குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதுடன், அவருக்குப் பின்னால் மோட்டார் சைக்கிளில் பயணித்த மகளும் காயமடைந்துள்ள நிலையில் யாழ். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த விபத்துச் சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

வெப்பமான வானிலை குறித்து ‘அம்பர்’ எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை பிரிவினால் வெப்பமான வானிலை...

35 வருட வெள்ளைப் பணிக்கு ஓய்வு!

அன்பும், அர்ப்பணிப்பும் நிறைந்த ஒரு நீண்டகால வைத்தியசாலைப் பணியை வெற்றிகரமாக நிறைவு...

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் புதிய அதிபராக அருட்தந்தை லெபோன் சுதன் கடமையேற்பு

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் புதிய அதிபராக இலங்கை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்