யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனுக்கு அடுத்த வருடம் ஜனவரி முதல் இடம் மாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு இடமாற்றப்படும் மகேசன் கொழும்பில் இராஜாங்க அமைச்சு ஒன்றின் செயலாளராக நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரியவருகின்றது
அதே நேரம் யாழ் மாவட்ட அரசு அதிபராக தற்போதைய கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் நியமிக்கப்படலாம் என கூறப்படுகின்றது. கிளிநொச்சி மாவட்த்திற்கு புதியவர் ஒருவர் அரச அதிபராக நியமிக்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கணபதிப்பிள்ளை மகேசன் யாழ் மாவட்ட அதிபராக பதவிவகித்த காலப்பகுதியில், அரசியல் கட்சியொன்றின் சார்பாக செயற்படுவதாக பரவலான குற்றச்சாட்டு எழுந்தது. அது தொடர்பில் எழுந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட ஆதாரங்களைின் மீது நடவடிக்கையெடுக்கவில்லையென்றும் குற்றம்சாட்டப்பட்டது.
இந்த நிலையில், அடுத்த வருடம் முதல் இந்த இடம் மாற்றம் வழங்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.




