மாணவிக்கு ஆண் வேடமிட்டு ஒன்றாக குடும்பம் நடத்திய ஆசிரியை!

Date:

பாடம் படிக்க வந்த மாணவியை காதலித்து, அவரை ஆண் போல வே்டமணிய வைத்து, ஒன்றாக குடும்பம் நடத்திய ஆசிரியை பற்றிய அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.

தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரை நகராட்சி, மதுரை சாலை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி பழனியம்மா. தம்பதிக்கு ஷாலினி என்கிற மகள் உள்ளார்.

இவர், பெரியகுளம் தென்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டிப்ளமோ ஹெல்த் கேர் பாட பிரிவில் படித்து வருவதாக கூறப்படுகிறது.

அதே கல்லூரியில் கைலாசப்பட்டியை சேர்ந்த முருகன்- கோகிலவாணி தம்பதியின் மகள் தீபா என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். ஆசிரியை தீபா ஏற்கனவே முத்துப்பாண்டி என்பவருடன் திருமணம் ஆனவர். தற்போது 3 மாதம் கைக்குழந்தை உள்ளது.

இந்நிலையில் ஆசிரியை தீபாவுக்கும், ஷாலினிக்கும் இடையே லெஸ்பியன் உறவு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆசிரியை தீபா ஆசை வார்த்தை கூறி ஷாலினியை கைலாசப்பட்டியில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

பின்னர், ஷாலினியை ஆணாக மாற்றி சிபு என, ஆண் பெயரிட்டுள்ளார். இதன் பின்னர், அவரது முடியை குட்டையாக வெட்டி, ஆண்களின் உடையணிவித்து, ஆணின் உருவம் போலவே மாற்றி உள்ளார்.

இதனைத் தொடர்ந்து இருவரும் கணவன், மனைவியாகவே வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஷாலினியை தனது தம்பி ஆனந்த் என்பவருக்கு திருமணம் செய்து விடலாம் என, தனது தாய் கோகில வாணியிடம் தீபா கூறியுள்ளார். அதற்கு கோகில வாணியும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தீபாவின் தம்பி ஆனந்த் கேரளாவில் இருந்து விடுமுறைக்கு கைலாசப்பட்டி வந்துள்ளார். அப்போது ‘உனக்கு திருமணம் முடிக்கப் போகும் பெண் இவள்தான்’ என தீபா அறிமுகம் செய்துள்ளார்.

இந்த நிலையில் மீண்டும் தீபாவின் தம்பி ஆனந்த் வேலைக்காக கேரளா சென்று விடவே தீபாவின் கணவன் முத்துபாண்டி தீபா நடவடிக்கையில் மாற்றம் கண்டு சந்தேகம் அடைந்துள்ளார்.

அப்போது, தங்களுக்கு பிறந்திருக்கும் குழந்தை தன்னை போல் இல்லை என்று கூறி, ஷாலினி என்கிற சிபுவிற்கும் தொடர்பு இருப்பதாக, சந்தேகம் அடைந்ததாக கூறப்படுகிறது.

ஷாலினி என்ற சிபு ஆணாக மாறிவிட்டதால் தன்னுடைய மனைவி தீபாவிற்கு பிறந்திருக்கும் குழந்தை ஷாலினி என்ற சிபுவிற்குதான் பிறந்துள்ளது என பெருத்த சந்தேகத்திற்கு ஆளாகி உள்ளார். இதனால் முத்துப்பாண்டிக்கும், தீபாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சிபு உண்மையில் ஆணா, பெண்ணா என்ற குழப்பமும் முத்துபாண்டிக்கு இருந்தது.

இந்நிலையில் தீபாவின் தம்பி ஆனந்திற்கும், ஷாலினி என்கின்ற சிபுவிற்கும் திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஆனந்த் தனது ஷாலினியுடன் நெருக்கமாக பழகி வருவதை தீபா தொடர்ந்து தடுத்து வந்துள்ளார்.

இதனால் தீபா மற்றும் ஷாலினி மீது ஆனந்த்துக்கு சந்தேகம் வந்துள்ளது. இந்நிலையில் ஷாலினி கணவன் ஆனந்த் மற்றும் வீட்டினருடன் தகராறு செய்து கொண்டு பெரியகுளம் நகராட்சி காலனியில் இருக்கும் தந்தை வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்நிலையில் ஷாலினி என்ற சிபுவை ஆசிரியை தீபா தேடி வந்து கண்டுபிடித்துள்ளார். இதன் பின்னர் ஷாலினியை அழைத்துக்கொண்டு யாருக்கும் தெரியாமல் திருவாரூர் மாவட்டம் சென்றுள்ளனர்

அங்கு ஷாலினி என்ற சிபு ஓட்டலில் வேலைக்கு சேர்ந்து ஆண் வேடத்திலேயே பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தீபாவை காணவில்லை என்று பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் தீபாவின் தந்தை முருகேசன் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வந்த நிலையில் பெரியகுளம் காவல் நிலையத்தில் ஷாலினி என்ற சிபுவின் தந்தை ரமேஷ் தனது மகளை காணவில்லை என புகாரளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து ஷாலினி என்ற சிபுவையும் போலீசார் தேடி, வெளியூரில் தலைமறைவாக இருந்த இருவரையும் கண்டுபிடித்தனர்.

இதன் பிறகு பெரியகுளம் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி இருவரையும் அவரவர் தாய், தந்தையுடன் போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி தீபா மற்றும் ஷாலினி என்ற சிபு கூறுகையில், ‘தற்போது பெற்றோரின் பிடிவாதத்தால் நாங்கள் பிரிந்து செல்கிறோம். மீண்டும், கண்டிப்பாக இருவரும் ஒன்று சேருவோம்’ என கூறினர்.

spot_imgspot_img

More like this
Related

ஃப்ளைதுபாய் துணை விமானி கோடரி மூலம் பயங்கரவாத தாக்குதல்

Flydubai விமானம் FZ1073-இன் துணை விமானி, விமானப் பயணத்தின்போது ஒரு "பயங்கரவாத"...

1 Kg கோழி இறைச்சி இலஞ்சமாக கேட்ட பொலிஸ்காரர் பணி இடைநீக்கம்!

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவருக்குப் பொலிஸ் பிணை வழங்குவதற்காக ஒரு கிலோகிராம்...

வெளிநாட்டு பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய முச்சக்கர வண்டி சாரதிக்கு 10 வருட சிறை!

வேலைவாய்ப்பு தருவதாகக் கூறி இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்