திருமணம் செய்வதாக ஏமாற்றி நகைக்கொள்ளை: 20 பெண்களை ஏமாற்றியவர் கைது!

Date:

விவாகரத்து பெற்ற பெண்களை குறிவைத்து 20 பெண்களை ஏமாற்றிய கல்யாண மன்னன் பற்றிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜான்சி ராணி (20). அவருக்கு திருமணமாகி கணவர் இறந்துவிட்டார். இந்நிலையில் ஜான்சி ராணி தனது தாயாரின் அறிவுறுத்தலின் பேரில் மேட்ரிமோனியல் தளமொன்றில் மறுமணம் செய்ய பதிவு செய்துள்ளார்.

சில நாட்கள் கழித்து பரமக்குடியை சேர்ந்த கார்த்திக் ஆரோக்கியராஜ் (26) என்பவர் ஜான்சி ராணியை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் தனியார் வங்கி ஊழியர் என்றும், திருமணமாகி விவாகரத்து செய்தவர் என்றும், ஜான்சி ராணியை மறுமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறினார்.

இதை நம்பிய ராணி, கார்த்திக்கிடம் தொடர்ந்து பேசி, இருவரும் நேரில் சந்தித்தனர். அப்போது திருமணத்திற்கு செயின் வாங்கி வந்ததாக கூறி பிரேமாவிடம் செயின் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார்.

பின்னர் ஜான்சி ராணியின் கழுத்தில் அணிந்திருந்த ஐந்து பவுன் சங்கிலியை வாங்கி, அதற்கு டாலர் வாங்கி வருவதாக எடுத்துச் சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் கார்த்திக் ஆரோக்கியராஜ் திரும்பி வராததால் சந்தேகமடைந்த ஜான்சி ராணி பல இடங்களில் தேடினர்.

இந்நிலையில், கார்த்திக் ஆரோக்கியராஜ் கொடுத்த நகைகள் போலி என கண்டறிந்த ஜான்சிராணி, போலீசில் அளித்த புகாரில், தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் இதுபோன்ற மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில் கார்த்திக் ஆரோக்கியராஜ் திருவண்ணாமலை மாவட்டத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்து அவரை கைது செய்தனர்.

விசாரணையில், கார்த்திக் ஆரோக்கியராஜ் விருதுநகர், விழுப்புரம், கோவை, ஈரோடு, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்ட பெண்களிடம் திருமணம் செய்து தருவதாக கூறி 100 பவுன் தங்க நகைகளை மோசடி செய்தது தெரியவந்தது.

மேட்ரிமோனியல் தளத்தில் மறுமணத்திற்கு பதிவு செய்யும் பெண்களின் விவரங்களை சேகரித்து, அவர்களிடம் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து நகைகளை வாங்கிச் சென்று மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு திராய்மடு கிராமத்தில் சட்ட விரோத மதுபானம் போதைப்பொருள் விற்பனை ஒழித்து தருமாறு கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு திராய்மடு கிராமத்தில் (சுவிஸ் கிராமம்)  நீண்டகாலமாக  பொலிசாரின் ஆதரவுடன் சட்டவிரோத...

‘எமக்கு வேறு வழியே இல்லை’: ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் கொடுத்தது பற்றி இந்திய தூதர் விளக்கம்!

வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அந்நாட்டை விட்டு வெளியேறிய பிறகு,...

முஸ்லிம் காங்கிரஸின் சட்டத்தரணிகள் அமைப்பு உருவாக்கம் – ரவூப் ஹக்கீம் தலைமையில் முதலாவது கலந்துரையாடல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் விசேட பிரிவாகக் கட்சியின் சட்டத்தரணிகள் அமைப்பு மிகக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்