தினேஷ் ஷாப்டர் கொலை வழக்கு: கொலையாளிகளை நெருங்குகிறதா பொலிஸ்?

Date:

ஒரு காலத்தில் இலங்கை கிரிக்கெட் அணியில் பந்துவீச்சாளராக இருந்து,  கிரிக்கெட் நிர்வாக அதிகாரியான உருவெடுத்து, பின்னர் ஜனசக்தி நிறுவனத்தின் தலைவராகி, பிரபல வர்த்தகராக உருவெடுத்த சந்திரா ஷாப்டரின் மகன் தினேஷ் ஷாப்டரின் படுகொலை மர்மம் இன்னும் தீர்க்கப்படவில்லை. இந்த கொலையால் இலங்கை முழுவதும் அதிர்ச்சியடைந்தது.

தினேஷ் ஷாஃப்டரும் அவரது தந்தையைப் போலவே சமூகத்தில் ஒரு முக்கிய நபராக இருந்ததால், அவரது கொலை நாடு முழுவதும் பரவலான கவனத்தை ஈர்த்தது.

தினேஷ் ஷாஃப்டர் போன்ற ஒரு முன்னணி வர்த்தகர், பட்டப்பகலில் மயானத்திற்கு அழைக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் மிக கச்சிதமாக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதால், பொலிசார் அதன் மர்மத்தை துலக்க மிகுந்த பிரயத்தனப்பட வேண்டியிருக்கிறது.

ஒரு முன்னணி வர்த்தகர் மயானத்திற்கு ஏன் சென்றார், அங்கு என்ன செய்தார் என்று கேட்பவர்கள் பலர் உள்ளனர். இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விரைவில் பதில் கிடைக்கும். தினேஷ் ஷாஃப்டரின் கொலைச் சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் மற்றும் கொலைப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை முன்னேறி வருவதால், விரைவில் கொலையாளி கைதாவார் என நம்பலாம்.

தினேஷ் ஷாஃப்டர் கொழும்பு 07 இல் மலர் வீதியில் 39ஆம் இலக்க வீட்டில் வசித்து வந்தார். இங்கிலாந்திலும் அவருக்கு சொந்தமாக வீடு உள்ளது. அவரது முதல் திருமணத்தில் பிறந்த பிள்ளை இங்கிலாந்தில் வசிக்கிறார். அதனால் அவர் இங்கிலாந்தில் அதிக நேரத்தை செலவிட விரும்புவதாக கூறப்படுகிறது.

தினேஷ் ஷாஃப்டரின் இரண்டாவது மனைவி தனி ஷமின் ஷாஃப்டர். அவர் 1978 இல் பிறந்தவர். தினேஷ் ஷாப்டரை விட 08 வயது இளையவர். தினேஷ்- தனி ஷமின் தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.

தினேஷ் ஷாஃப்டரின் மனைவி தனி ஷமின், தனது கணவர் கொலை செய்யப்பட்ட நேரத்தில், அசெட்லைன் என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்ததாக போலீஸில் தெரிவித்துள்ளார். அது தவிர, பல நிறுவனங்களில் இயக்குநர் பதவிகளையும் வகிக்கிறார்.

தினேஷ் ஷாஃப்டர் ஜனசக்தி குழுமத்தின் இயக்குனராகவும், ஃபர்ஸ்ட் கேபிடல் ஹோல்டிங் பிஎல்சி நிர்வாக இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்

தினேஷ் ஷாஃப்டரின் கொலை தொடர்பான விசாரணையில், தனி ஷமினும் முக்கிய அங்கமாக உள்ளார். அவரிடமும் பொலிசார் வாங்குமூலம் பெற்றுள்ளனர். அவரது கையடக்க தொலைபேசியும் பகுப்பாய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது.

தனி ஷமின் அளித்த வாக்குமூலத்தின் பிடி, கொலை நடந்த அன்று காலை முதல் தனது கணவரின் நடத்தையில் மாற்றத்தை உணர்ந்ததாகவும், அது ஏன் என்று தன் கணவர் தன்னிடம் சொல்லவே இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தனி ஷமின் கூறியபடி, அன்று மதியம் 2.00 மணியளவில் தினேஷ் ஷாஃப்டர் அரை மணி நேரத்தில் திரும்பி வருவேன் என்று கூறி வீட்டை விட்டு வெளியேறினார். wp KU 8732 என்ற எண் கொண்ட தனது காரில் ஏறினார். அவரே காரை ஓட்டினார்.

“அவர் எத்தனை மணிக்கு வருவார் என்று கேட்டேன். அப்போது தான் அரை மணி நேரத்தில் வந்துவிடுவேன் என்றார்“என தனி ஷமீன் ஒரு கதையை போலீசிடம் கூறியுள்ளார்.

அவர் கூறியபடி அரை மணி நேரமாகியும் தினேஷ் ஷாப்டர் வீட்டிற்கு வரவில்லை. அதையடுத்து, தனி ஷமின் தனது மொபைல் போனில் இருந்து தினேஷ் ஷாப்டரின் மொபைல் போனுக்கு மெசேஜ் அனுப்பியதாக கூறப்படுகிறது. பதில் இல்லாததால், மெசேஜையும் அவர் பார்க்கவில்லையென்றதும், தினேஷ் ஷாப்டரின் கைப்பேசியின் இருப்பிடத்தை அவர் தனது கைப்பேசி மூலம் சரிபார்த்ததாகவும், பொரளை பொது மயானம் தினேஷ் ஷாஃப்டரின் இருப்பிடமாக காட்டப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

அரை மணி நேரத்தில் வருகிறேன் என்று கூறிய கணவர் அப்போது வராததால் மிகவும் வருத்தமடைந்த தனி ஷமின், உடனடியாக ஜனசக்தி நிறுவன நிர்வாக அதிகாரி ஓங்கிரி பட்ரிக் கிரிஷ் பெரேராவை அழைத்து, கணவர் பற்றிய தகவலை பரிமாறியதாகவும் கூறியுள்ளார்.

கிரிஷ் பெரேரா தனது கணவரின் உறவினர் என்றும், உறவை விட தினேஷ் ஷாப்டரின்  நெருங்கிய நண்பராக இருந்ததாக தனி ஷமின் கூறுகிறார்.

கிரிஷ் பெரேரா, தினேஷ் ஷாஃப்டரின் நம்பிக்கைக்குரியவர் என்றும், அவருடைய பல வணிக ஒப்பந்தங்கள் மற்றும் வணிக ரகசியங்கள் பலவற்றை அறிந்தவர் என்றும் கூறப்படுகிறது. அதாவது,  தினேஷ் ஷாஃப்டரின் இரண்டு சகோதரர்களை விட அதிகமாக இரகசியங்களை அறிந்து வைத்துள்ளதாக கூறியுள்ளார்.

கிரிஷ் இரண்டு பிள்ளைகளின் தந்தை. 1985 ஆம் ஆண்டு பிறந்த கிரிஷ் பெரேரா, வத்தளை, ஹடல பிரதேசத்தில் வசிக்கிறார். கிரிஷ் பெரேரா நெக்ஸ்ட் இன்வெஸ்ட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனராகவும் உள்ளார். கிரிஷ் மற்றும் தினேஷ் இடையேயான உறவு 19 வருடங்கள் பழமையானது. என கிரிஷ் பெரேரா பொலிஸாரிடம் கூறியுள்ளார். அதன்படி, தினேஷ் 18 வயதில் இருந்து ஷாப்டரின் கீழ் ஊழியராக பணியாற்றியதாக தெரிகிறது.

தினேஷ் ஷாஃப்டரின் தொடர்பு இல்லாததால் தனி ஷமின் உடனடியாக கிரிஷ் பெரேராவுக்கு போன் செய்து, அரை மணி நேரமாகியும் தினேஷ் ஷாப்டர் வரவில்லை என்றும், கணவனைப் பற்றி அறியுமாறும் கூறியுள்ளார்.

“நான் ஓங்கிரிக்கு ஷாஃப்டரின் இருப்பிடத்தை அனுப்பி அவரைப் பார்க்கச் சொன்னேன்“ என்றார் மனைவி. அப்போது, ​​தன்னிடமும் ஷாஃப்டரின் இருப்பிடம் இருந்ததாக கிரிஷ் போலீசாரிடம் கூறியுள்ளார்.

அதன்படி, தினேஷ் ஷாஃப்டர் அன்றைய தினம் தனது மனைவி மற்றும் அவரது நண்பர் கிரிஷ் ஆகியோருடன் அவர் இருக்கும் இடத்தைப் பற்றி தெரிந்துகொள்ள லொகேஷன் பரிமாறிக்கொண்டதாகத் தெரிகிறது. இது குறித்து தற்போது சர்ச்சையான சூழல் நிலவி வருகிறது.

ஏனென்றால், தினேஷ் ஷாஃப்டர் தனது இருப்பிடத்தை தனது மொபைல் போனில் மற்றவர்களுடன் பரிமாறிக்கொண்டதாகத் தெரியவில்லை. இதுபற்றி ஏற்கனவே விசாரணை நடந்து வருகிறது, குற்றப் புலனாய்வுத் துறையின் டிஜிட்டல் தடயவியல் கணினி ஆய்வகங்கள் மூலம் அவரது மொபைல் போன் தீவிர விசாரணையில் உள்ளது.
இடப் பரிமாற்றங்கள் தொடர்பான கடந்த கால தகவல்களை வெளிக்கொணர்ந்து அதில் தினேஷ் கொலை தொடர்பான முக்கியத் தகவல்கள் உள்ளதா என்பதைக் கண்டறிவய விசாரணையாளர்கள் முயற்சிக்கின்றனர்.

தனி ஷமினிடம் இருந்து கிரிஷ் பெரேராவுக்கு தொலைபேசி அழைப்பு வந்தபோது, ​​அவர் பணிபுரியும் நிறுவனத்திற்கு வெளியே இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் வீதியோரம் நின்றிருந்தார். அவர் நின்ற இடம், பொரளை பொது மயானத்திற்கு எளிதில் சென்றடையும் தூரத்தில் உள்ளது.

கிரிஷ் பெரேராவின் கூற்றுப்படி, தனி ஷமினிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தபோது அவர் தனது இரண்டு பிள்ளைகளையும் ஏற்றிவர பாடசாலைக்கு சென்றிருந்தார். தொலைபேசி அழைப்பு வந்ததும், தனது இரண்டு பிள்ளைகளையும் வத்தளையில் உள்ள தனது வீட்டிற்கு பாதுகாப்பாக பயணிக்க ஏற்பாடு செய்துவிட்டு தான் பணிபுரியும் நிறுவனத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட கெப் வண்டியில் ஏறி பொரளை பொது மயானத்தை வந்தடைந்தார். அந்த வண்டியை ஓட்டி வந்தவர் நிஹால் என்பவர் என்று கூறப்படுகிறது.

கிரிஷ் பெரேரா அழைப்பை பெற்று மிகக் குறுகிய நேரத்திலேயே பொரளை பொது மயானத்திற்குள் நுழைந்துள்ளார்.

தினேஷ் ஷாப்டர் கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணையின் போது குற்றப் புலனாய்வுப் பிரிவின் புலனாய்வாளர்களுக்கு எழுந்த முதல் பிரச்சினை அவர் வேறு எங்காவது கொல்லப்பட்டு மயானத்துக்குக் கொண்டு செல்லப்பட்டாரா என்பதுதான். அந்த சந்தேகத்தைத் துடைக்க, பாதுகாப்பு கமரா தரவுகளை விசாரிப்பதில் புலனாய்வாளர்கள் தங்கள் கவனத்தைத் திருப்பினர்.

மலர் வீதியில் உள்ள வீட்டிலிருந்து அவர் வெளியேறியது வீட்டிலுள்ள கமராவில் பதிவாகியிருந்தது. மதியம் 2.06 மணியளவில் அவர் தனது காரை வீதிக்கு இறக்கியது கமராவில் பதிவாகியிருந்தது.

அந்த நேரத்தில் காரில் வேறொருவர் இருந்தாரா என்பதை அறிய பல்வேறு தொழில்நுட்ப விசாரணைகள், வீட்டு பாதுகாவலர்களிடம் விசாரணைகள் நடத்தப்பட்டன. தினேஷ் ஷாஃப்டர் அன்று காரில் ஏறி தனியாக சென்றது உறுதியானது.

அப்போதிருந்து, ஒவ்வொரு சந்தியிலும் உள்ள பாதுகாப்பு கமராக் காட்சிகளைக் கவனித்து மிகவும் சிக்கலான மற்றும் கடினமான விசாரணைக்குப் பிறகு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் புலனாய்வாளர்கள், தினேஷ் ஷாஃப்டர் தனது வீட்டை விட்டு வெளியேறி பதினைந்து முதல் இருபது நிமிடங்களில் பொரளை பொது மயானத்திற்கு நேரடியாக வருவதை உறுதிப்படுத்தினர்.

வழியில் அந்த ஒரு இடத்தில் மட்டும் தன் காரை நிறுத்தினார். அந்த இடம் கொழும்பு 07, மலலசேகர மாவத்தை 28 இல் அமைந்துள்ள Rodrigo Logenzi Enjoyers என்ற சிற்றுண்டிக் கடை. அதில், இரண்டு பைகளில் இரண்டு பேருக்கு தேவையான தின்பண்டங்களை வாங்கிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. அந்த இரண்டு தின்பண்டங்களையும் காரில் வைத்துவிட்டு நேராக பொரளை பொது மயானத்திற்கு சென்றார்.

தேவி பாலிகா வித்யாலயாவின் பக்கவாட்டில் உள்ள நுழைவாயிலின் ஊடாக தனது காரை மயானத்திற்குள் நுழைந்தார். அப்போது மயானத்தில் காவலர்கள் இருந்தார்களா என்பது தெரியவில்லை. பாதுகாவலர்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பொரளை பொது மயானத்திற்குள் நுழையும் போது வாகனங்கள் எவ்வித சோதனைக்கும் உட்படுத்தப்படுவதில்லை. மயானத்தில் வண்டியை நிறுத்திவிட்டு, அங்கேயே பொழுதைக் கழிக்க எவருக்கும் சுதந்திரமான சூழல் இருந்தது.

பாதுகாப்பு கமெரா தரவுகளை ஆய்வு செய்ததில் தெளிவாக தெரியவந்த உண்மைகளை அலசும்போது, ​​அரை மணி நேரத்தில் வருவேன் என்று கூறி வீட்டை விட்டு வெளியேறிய தினேஷ் ஷாப்டரின் இலக்கு பொரளை பொது மயானம்தான் எனத் தெரிகிறது.

மயானம்தான் செல்லுமிடம் என்றும், மயானத்தில் சந்திக்கவிருந்த ஒரு விருந்தாளிக்கும் சேர்த்து இரண்டு சிற்றுண்டி பார்சல்கள் வாங்கியுள்ளார் என்றும் ஊகிக்க முடியும். தினேஷ் ஷாப்டரின் பிரேதப் பரிசோதனையில் கூட, அவர் மலலசேகர மாவத்தையில் இருந்து வாங்கிய சிற்றுண்டிகளை மயானத்திலோ அல்லது காரிலோ சாப்பிட்டதை அவரது குடலில் கண்டெடுக்கப்பட்ட உணவுத் துண்டுகள் உறுதிப்படுத்துகின்றன.

அந்த சிற்றுண்டிப் பைகளில் ஒன்றை தினேஷ் ஷாஃப்டர் காலி செய்தால், இரண்டாவது பை என்ன ஆனது? தினேஷ் ஷாப்டரின் கொலையாளியை மயானத்தில் சந்திக்கச் சென்றவர் அல்லமு வேறு யாரும் சாப்பிட்டதாக ஊகிக்க முடியும். இந்த சிற்றுண்டியும் இப்பொழுது மர்மமாகியுள்ளது.

அதாவது, தனக்குத் தெரியாத ஒருவருக்கு சிற்றுண்டி வழங்கிக் கொண்டு மயானம் போன்ற இடத்திற்கு அழைத்துச் செல்லும் வாய்ப்பு குறைவாகனது. தினேஷ் ஷாப்டர் மயானத்தில் சந்திக்கச் சென்ற நபர், அவரிடம் அதிக அனுதாபம் கொண்ட ஒருவர் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. பயணம் என்பது இரண்டு நிமிட விடைபெறும் உரையாடலாக இருந்தால், அங்கே சிற்றுண்டி தேவையே இருக்காது. அதன்படி, தினேஷ் ஷாப்டரின் பயணம் அரை மணி நேரம் திட்டமிடப்படவில்லை என்பது தெளிவாகிறது. அத்துடன், பொரளை மயானத்திற்குள் உள்ள சிக்கலான பாதைகளில் சுலபமாக காரை செலுத்த, அங்கு தினேஷ் ஷாப்டர் ஏற்கெனவே சென்று வந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

இதில் சிக்கலான விவகாரம்,  இந்த பயணத்தில் தினேஷ் ஷாப்டரின் மனைவி ஏன் மிகவும் வருத்தப்பட்டார் என்பதே. அது அவருக்கு மட்டுமே தெரியும். அன்று இரவு தான் இங்கிலாந்து செல்ல வேண்டியிருந்ததால், விமான நிலையத்திற்கு சீக்கிரம் செல்ல விரும்புவதாகவும், அதனால் கவலையடைந்து கணவன் இருக்கும் இடத்தைத் தேடியதாகவும் அவர் ஒருமுறை பொலிஸாரிடம் கூறியிருந்தார். இரவு 8.30 மணி செல்லும் விமானத்தைப் பற்றி அவர் மதியம் 2.30 மணிக்கு ஏன் கவலைப்பட்டார் என்பதும் புலனாய்வாளர்கள் முன்னுள்ள கேள்விகளில் ஒன்று.

தினேஷ் ஷாஃப்டரின் கொலை குறித்து, கிரிஷ் பெரேரா பொலிஸாரிடம் கூறுகையில், அன்று மதியம் 1.00 மணி முதல் 1.30 மணி வரை P.Tயை சந்திக்கப் போவதாக தினேஷ் ஷாப்டர் கூறியதாக கூறினார். P.T என அவர் குறிப்பிட்டது, கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தோமஸை. தினேஷின் கொலைக்கு பிரையன் தோமஸ் தான் காரணம் என கிரிஷ் பெரேரா கூற முயன்றார். பொலிஸாரின் முன்னிலையில், தினேஷ் ஷாப்டரை பிரையன் தோமஸ் 160 கோடி ரூபாய் ஏமாற்றிவிட்டதாகவும், அதனால் இந்த குற்றத்தை பிரையன் செய்ததாகவும் அவர் சுட்டிக்காட்ட விரும்பினார்.

இது தொடர்பாக தற்போது நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தினேஷ் ஷாப்டர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தினேஷ் ஷாஃப்டரிடம் பிரையன் தோமஸ் மோசடி செய்ததாக கூறப்படும் பணத்தின் உண்மையான பெறுமதி 140 கோடி ரூபாய்.

நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருக்கும் போது தினேஷ், பிரையன் தோமஸை மயானத்தில் சந்திப்பாரா? விசாரணையின் தொடக்கத்தில் புலனாய்வாளர்களுக்குக் எழுந்த கேள்வி இது.

இந்த விவகாரத்தில் புலனாய்வாளர்கள் தனிக்கவனம் செலுத்தும் போது, ​​தினேஷ் ஷாப்டர் கொல்லப்பட்ட நாளில் பிரையன் தோமஸ் அவரது வீட்டை விட்டு வெளியே கூட வரவில்லை என்று தெரிய வந்தது. அது தவிர, மற்றொரு அறிவியல் சான்றுகளின் தொகுப்பு பிரையனுக்கும் கொலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைக் காட்டுகிறது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இது தெரியவந்துள்ளது. விசாரணைகள் எதிர்காலத்தில் எந்த வழியில் செல்லும் என்று கூற முடியாது.

அதற்குக் காரணம், பணம் இருக்கும் யாருமே ஒப்பந்தக் கொலைகாரர்களை வாடகைக்கு அமர்த்தலாம்.

ஆனால் முதல் பார்வையில், குற்றப் புலனாய்வுத் துறையின் புலனாய்வாளர்கள் இந்தக் கொலையில் பிரையன் தோமஸை ஈடுபடுத்த சதி இருந்ததைக் கண்டுபிடித்தனர். அன்று மாலை 2.30க்கு பிறகு தினேஷ் ஷாஃப்டரின் கைப்பேசியில் இருந்து பிரையனின் கைப்பேசிக்கு ஆங்கிலத்தில் “நீ வரும் வரை நான் காத்திருப்பேன்” என்று செய்தி வந்தது. அப்போது, ​​இருவருக்குள்ளும் சந்திப்பு, உரையாடல் திட்டம் எதுவும் இல்லாததால், “I don’t have any conversation with you” என்று ஆங்கிலத்தில் பதிலளித்தார் பிரையன் தோமஸ்.

இதுபற்றிய உண்மைகளை ஆய்வு செய்யும் போது, ​​தினேஷ் ஷாஃப்டர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குற்றவாளிகளிடம் சிக்கி பலியாகிய பிறகு, இந்த செய்தி அவரது கைபேசியில் இருந்து பிரையன் தோமஸின் கைபேசிக்கு அனுப்பப்பட்டதாக புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதன்படி, தினேஷ் ஷாப்டரின் கையடக்கத் தொலைபேசி தொடர்பில் ஓரளவுக்கு அறிந்த ஒருவரே இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

பொரளை பொது மயானத்தில் உள்ள தேவி பாலிகா வித்தியாலயத்தின் அண்மை பாதையால் நுழைந்து, மாயத்தில் விமானப்படை வீரர்களின் நினைவுத்தூபிக்கு அருகில் தனது காரில் உயிராபத்தாக இருந்த தினேஷ் ஷாஃப்டரை கண்டவர் கிரிஷ் பெரேரா.

தனி ஷமினின் தகவலின்படி அவர் அங்கு செல்கிறார். தினேஷ் ஷாஃப்டர் வீட்டை விட்டு வெளியேறிய அரை மணி நேரத்திற்குப் பிறகு கிரிஷ் பெரேராவிடம் இதைப் பற்றி தனி ஷமின் கூறினார்.

மதியம் சுமார் 2.30 மணி அல்லது அதற்கு சற்று பின்னர், தனக்கு அழைப்பு வந்த போது, தனது இரு பிள்ளைகளையும் பாடசாலையிலிருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காகச் சென்று கொண்டிருந்ததாகவும், அழைப்பைப் பெற்ற உடனேயே, பிள்ளைகளை வீட்டிற்கு அனுப்பிவிட்டு, தான் பணிபுரியும் நிறுவனத்தில் இருந்து வண்டியை வரவழைத்துக் கொண்டு பொரளை பொது மயானத்திற்கு சென்றதாக கிரிஷ் பெரேரா கூறியுள்ளார். அப்போது நிஹால் என்ற நபர் காரை ஓட்டி வந்தார்.

தனி ஷமினின் தொலைபேசி அழைப்பு வந்த பதினைந்து நிமிடங்களில்,  கிரிஷ் பெரேரா மயானத்திற்குள் நுழைகிறார். தினேஷ் ஷாஃப்டர் நுழைந்த அதே பக்கத்திலிருந்தே அவரும் நுழைகிறார்.

தினேஷ் ஷாஃப்டரைத் தேடி கிரிஷ் பெரேரா தனியாகவே மயானத்திற்குள் நுழைகிறார். வீதியில் வாகனத்தை நிறுத்துமாறு, கப் வண்டி ஓட்டுநரிடம் கூறினார். அந்த நேரத்தில் மயானத்தின் நுழைவாயிலுக்கு அருகில் சிறிது போக்குவரத்து நெரிசல் இருந்ததால் மயானத்திற்குள் நுழையாமல் வீதியில் வண்டியை நிறுத்துமாறு ஓட்டுநரிடம் தெரிவித்ததாக அவர் கூறுகிறார். இந்த விவகாரங்கள் இன்னும் விசாரணையில் உள்ளன. இது குறித்து விசாரணையாளர்கள் இன்னும் தெளிவான முடிவுக்கு வரவில்லை. விஞ்ஞான மற்றும் சோதனை ஆதாரங்களை சேகரித்த பின்னர், புலனாய்வாளர்கள் வரும் நாட்களில் கிரிஷ் பெரேராவிடம் இது குறித்து விசாரித்து தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார்கள்.

கிரிஷ் பெரேராவின் கூற்றுப்படி, தினேஷ் ஷாஃப்டரைத் தேடி அவர் தனியாக மயானத்திற்குள் நுழைந்தார். அவர் சென்று தினேஷ் ஷாப்டர் தங்கியிருக்கும் இடத்தை சரியாக கண்டுபிடித்தார். மயானத்தின் 09வது பாதையில் அந்த கார் நிற்பதை பார்த்தார். அங்கு சென்று சோதனை செய்ததில், தினேஷ் ஷாப்டர் உயிராபத்தான நிலைமையில் காணப்பட்டார்.

தன்னுடன் வந்த சாரதி நிஹாலை அவர் நினைவில் வைத்திருப்பதாகத் தெரியவில்லை. மயானத்தின் ஒரு மூலையில் இறந்த உடலைப் புதைப்பதற்காக குழி தோண்டிக் கொண்டிருந்த ஒரு தொழிலாளியைக் கண்டு, அவரைக் கூப்பிட்டு அங்கே அழைத்து வந்தார். கொழும்பு மாநகர சபையின் ஊழியரான அந்தத் தொழிலாளி, காருக்குள் சரிந்து கிடந்த தினேஷ் ஷாப்டரை பார்த்து, மயானத்தில் இறுதிச் சடங்கிற்காக வந்த ஒருவர் நோய்வாய்ப்பட்டிருப்பதாக நினைக்கிறார். அங்கு சென்ற பிறகுதான் அது குற்றம் என்று புரிந்தது. அப்போது ஓட்டுநர் இருக்கையில் தினேஷ் ஷாப்டர் இருந்தார். அவரது கழுத்தில் கம்பி கட்டப்பட்டு, அதன் இரு முனைகளும் ஓட்டுநர் இருக்கையில் கட்டப்பட்டிருந்தது. இப்போது அது கேபிள் இணைப்புகளால் பூட்டப்பட்டுள்ளது.

தினேஷ் ஷாஃப்டரை அந்தத் தொழிலாளி வந்து பார்த்த பிறகு, கிரிஷ் பெரேரா அவரை கட்டுக்களிலிருந்து விடுவிக்கிறார். அதற்கு தொழிலாளியும் உதவினார்.

அப்போது க்ரிஷ் பெரேரா, சாரதி இருக்கைக்கு பின்னால் தினேஷ் ஷாப்டரை அமர வைக்க முயற்சிக்கிறார். அது முடியாமல் போக, தினேஷ் ஷாப்டரை மிகவும் சிரமப்பட்டு சாரதி இருக்கைக்கு அடுத்துள்ள இருக்கைக்கு மாற்றினார். கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு செல்லும் வழி தெரியவில்லை எனக் கூறி மயான பணியாளரையும் காரில் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளார்.

பிற்பகல் 3.00 மணி முதல் 3.15 மணிக்கிடையில் தேசிய வைத்தியசாலையில் அவர்கள் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அப்போதும், தினேஷ் ஷாப்டர் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே போராடிக் கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் கிரிஷ் பெரேரா மற்றும் அவரது கணவர் தினேஷ் ஷாப்டர் ஆகியோரின் மொபைல் போன்களிற்கு தொடர்ந்து அழைப்புகள் மேற்கொண்டதாக தனி ஷமின் கூறுகிறார். இருவரும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை என்றும் அவர் கூறுகிறார். இறுதியாக மதியம் 3.17 மணியளவில் கணவரின் கைப்பேசியில் இருந்து பதில் கிடைத்ததாக கூறப்படுகிறது. பதிலளித்தவர் யாரென்று அவருக்குத் தெரியாது. அந்த நபர் தனது கணவரோ அல்லது கிரிஷ் பெரேராவோ இல்லை என்பது மட்டுமே அவருக்கு தெரியும். அழைப்பிற்கு பதிலளித்த நபர், தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு விரைவில் வருமாறு கூறினார்.

அதன்படி, அவர் மருத்துவமனைக்கு வரும்போது, ​​கிரிஷ் பெரேரா மயானத் தொழிலாளியுடன் அங்கிருக்கிறார்.

மயானத்தில் நிற்கும் போது தினேஷ் ஷாப்டரின் கார் நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து வேகமாக ஒரு நபர் செல்வதை தொழிலாளி தொலைவிலிருந்து பார்த்ததாக தெரிவித்தார். அதாவமு, கிரிஷ் பெரேரா அங்கு வந்து உதவி கோரி அலறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அது நடந்தது.

தேசிய வைத்தியசாலையில் இதுபற்றி மயானத் தொழிலாளி கூறும்போது, ​​கிரிஷ் பெரேரா தனது கைத்தொலைபேசியில் இருந்த பிரையன் தோமஸின் சில புகைப்படங்களைக் காட்டி, “இவன்தான் கொலை செய்தவன் அல்லவா” எனக் கூறியதாகவும், அவரை அடையாளம் காண கடுமையாக முயற்சித்ததாகவும் விசாரணை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

தினேஷ் ஷாப்டரின் கார் நின்ற இடத்திலிருந்து ஒரு உருவம் நடந்து வருவதை தொழிலாளி பார்த்தார், அதனால் அந்த நபர் பிரயன் தோமஸா அல்லது வேறு யாராவதா என அடையாளம் காண முடியவில்லை. அதனால் தான் அந்த புகைப்படத்தை அவர் அடையாளம் காணவில்லை.

பொரளை பொலிஸார் இக்குற்றம் தொடர்பான ஆரம்ப விசாரணைகளை ஆரம்பித்த போதும், கிரிஷ் பெரேரா, பிரையன் தோமஸ் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுவதாக மீண்டும் மீண்டும் கூறினார். அந்த சந்தேகத்தை வலுப்படுத்தும் வகையில், பிரையன் தோமஸ் அல்லது யாரேனும் ஒருவர் தனது கணவருக்கு இந்தக் குற்றத்தைச் செய்ததாக தனி ஷமினும் போலீஸாரிடம் கூறினார்.

பண பரிவர்த்தனை தொடர்பாக தினேஷ் ஷாப்டர் மிகுந்த வேதனையில் இருப்பதாகவும் அவர் கூறினார். மேலும், இதுபற்றி தனக்குத் தெரிந்தாலும் தனது கணவர் தன்னிடம் எதுவும் கூறவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அதை பேசினால் மனமுடைந்து விடுவார் என்று எண்ணி தன் கணவன் அப்படிச் சொல்லாமல் இருந்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.

தனது கணவருக்கு இவ்வளவு பிரச்சனையை ஏற்படுத்த பிரையன் தோமஸை தவிர வேறு யாரும் எதிரி இல்லை என்றும் தெரிவித்தார்.

இப்படித்தான் தினேஷ் ஷாஃப்டரின் கொலையின் சந்தேகம் முதலில் பிரையன் தோமஸிடம் வெளிப்பட்டது. தற்போது அந்த சந்தேகம் வேறு திசையில் சென்றுள்ளது. அவர்கள் ஓரளவு அடையாளம் காணப்பட்டாலும், வலுவான ஆதாரங்கள் இல்லாததால், விசாரணை அதிகாரிகள் இன்னும் அவர்களை நீதியின் முன் நிறுத்துவதில் தாமதம் செய்கின்றனர்.

இந்த கொலை அவரது வியாபார ஒப்பந்தம் தொடர்புடையதா? இல்லை என்றால் வேறு ஒரு சம்பவத்தை அடிப்படையாக கொண்டதா என்ற பலமான சந்தேகம் எழுந்துள்ளது. தற்போது தினேஷின் மொபைல் பற்றிய உண்மைகளை வெளிக்கொணர நிறைய அறிவியல் ஆய்வுகள் நடந்து வருகின்றன

தினேஷின் கைத்தொலைபேசியில் இருந்து அவரது வங்கிக் கணக்கு வரையிலான அனைத்துத் தகவல்களையும் ஆராய்ந்து அது குறித்த உண்மைகளை வெளிக்கொணரும் வகையில் தற்போது விஞ்ஞான ரீதியான விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தினேஷின் மட்டுமின்றி, மற்றொரு சந்தேக நபரின் அடையாள அட்டையின் மூலமும், இலங்கையில் உள்ள 16 வங்கிகளிலும், அந்த வங்கிகளில் உள்ள கணக்குகள் மூலமான பரிமாற்றங்கள் பற்றியும் ஆராயப்பட்டு வருகிறது.

தினேஷ் ஷாப்டரின் சகோதரர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தியதில், விசாரணை அதிகாரிகள் வணிகம் தொடர்பான பல விவரங்களைத் தெரிந்துகொண்டனர்.

அதுமட்டுமின்றி, விடுபட்ட சில தகவல்களைக் கண்டறிய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் புலனாய்வாளர்கள் தினேஷ் ஷாப்டர் மற்றும் அவரது மனைவி தனி ஷமின், அவரது நண்பர் கிரிஷ் பெரேரா ஆகியோரின் கைத்தொலைபேசி மற்றும் கல்லறை ஊழியரின் கைத்தொலைபேசிகளையும் பகுப்பாய்விற்கு அனுப்பியுள்ளனர்.

இவர்கள் தொடர்பில் மட்டுமன்றி, தினேஷ் ஷாப்டர் வசித்த வீட்டிற்கு பாதுகாப்பு வழங்கும் நிறுவனத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடமும், வீட்டின் வேலையாட்களிடமும் புலனாய்வாளர்கள் விரிவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். பல கேள்விக்குரிய பிரச்சினைகளை தீர்க்க அவர்களின் ஆதரவைப் பெற வேண்டும்.

இந்த கொலையில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால், இலங்கையின் மிகப்பெரிய மயானத்திற்குச் சென்று காரில் அமர்ந்து சிற்றுண்டி அருந்தி, அரட்டை அடித்த, தினேஷ் ஷாப்டரின் மிக நெருக்கமானவர் யார் என்பதுதான். அந்த நெருங்கியவரை கண்டறிந்தால்தான் தினேஷ் ஷாப்டர் கொலையின் மர்மம் விலகும்.

எப்படியோ,  தினேஷ் ஷாப்டருக்கு மிக நெருக்கமான ஒருவரே கொலையின் பின்னணியில் இருந்திருக்கலாமென கருதப்படுகிறது. அந்த நபருக்கு எதிராக வலுவான ஆதாரங்களை சேகரிக்கின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

நடு வீதியில் வாளுடன் அட்டகாசம் செய்த 3 பேருக்கு விளக்கமறியல்

திவுலபிட்டிய நகரில் பேருந்து ஓட்டுநர் மீது வாளால் தாக்குதல் நடத்த முயன்ற...

நீதிபதிகள் ஓய்வு வயது சர்ச்சை: ஜனாதிபதி- சட்டத்தரணிகள் சந்திப்பு சர்ச்சை!

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான முன்மொழியப்பட்ட...

இந்தியாவின் 80வது சுதந்திரதினம்

இந்தியாவின் 80வது சுதந்திர தினமான இன்றைய தினம் சனிக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்