24.2 C
Jaffna
December 17, 2024
Pagetamil
உலகம் முக்கியச் செய்திகள்

‘உக்ரைன் போரை விரைவாக முடிவுக்கு கொண்டு வருவதே’: எமது இலக்கு ஜனாதிபதி புடின்!

உக்ரைன் உடனான மோதலை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதை ரஷ்ய நோக்கமாக கொண்டுள்ளது என்று அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பு நிகழ்த்தி 10 மாதங்கள் ஆகிவிட்டன. இந்த 10 மாதங்களில் முதல்முறையாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி அமெரிக்கா சென்று அந்நாட்டு [னாதிபதி ஜோ பைடனை சந்தித்து பேசினார். பின்னர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றவும் செய்தார்.

ஜெலென்ஸ்கி – பைடன் பேச்சுவார்த்தைக்கு ஒருநாளுக்கு பின் உக்ரைன் உடனான மோதலை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவதை ரஷ்யா நோக்கமாக கொண்டுள்ளது என்று புடின் பேசியுள்ளார்.

புடின் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்-

“எங்கள் இலக்கு இராணுவ மோதலின் ஃப்ளைவீலை சுழற்றுவது அல்ல, இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதுதான். இதற்காக நாங்கள் பாடுபடுகிறோம், தொடர்ந்து பாடுபடுவோம். விரைவில் சிறந்த முறையில் நிச்சயமாக நாங்கள் இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர முயற்சிப்போம்.

விரோதங்கள் அதிகரிப்பது நியாயமற்ற இழப்புகளுக்கு வழிவகுக்கிறது என்று நான் பலமுறை கூறியுள்ளேன். அனைத்து ஆயுத மோதல்களும் எதாவது ஒரு வகையில் இராஜதந்திர ரீதியில் சில வகையான பேச்சுவார்த்தைகளுடன் முடிவடைகின்றன. எவ்வளவு முரண்பட்ட கருத்து கொண்டவர்களாக இருந்தாலும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்துக்கொள்கிறார்கள். இந்த உணர்வு நம்மை எதிர்ப்பவர்களுக்கு எவ்வளவு சீக்கிரம் வருமோ அவ்வளவு நல்லது. இதை நாங்கள் ஒருபோதும் கைவிடவில்லை” என்றார்.

உக்ரைன் தான் பேrச்சுவார்த்தைக்கு மறுப்பதாக ரஷ்யா கூறி வருகிறது. ரஷ்யா தனது தாக்குதல்களை நிறுத்த வேண்டும் மற்றும் கைப்பற்றிய அனைத்து நிலப்பரப்பையும் கைவிட வேண்டும் என்று உக்ரைன் கூறுகிறது.

ரஷ்ய படைகள் உக்ரைனை விட்டு வெளியேறுவது, இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட அம்சங்களை கொண்ட, 10 அம்ச சமரச திட்டம் என உக்ரைன் ஜனாதிபதி வெளியிட்ட வரைபை ஆதரிப்பதாக நேற்று முன்தினம் பிடனும் கூறியிருந்தார். இந்த திட்டத்தின் படி எந்தக்காலத்திலும் யுத்தம் முடியாது என சர்வதேச நோக்கர்கள் தெரிவித்திருந்தனர்.

இதேவேளை, புடின் நேற்று கருத்து தெரிவிக்கையில் பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்பின் முக்கியத்துவத்தை நிராகரித்தார்.

ஜெலென்ஸ்கியின் அமெரிக்க விஜயத்தின் போது, ஒரு பேட்ரியாட் அமைப்பை வழங்க பிடன் ஒப்புக் கொண்டார்.

ரஷ்யா அதை எதிர்கொள்ள ஒரு வழியைக் கண்டுபிடிக்கும் என்று புடின் கூறினார்.

இது “மிகவும் பழமையானது” என்றும் ரஷ்யாவின் S-300 சிஸ்டம் போல வேலை செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.

“ஒரு மாற்று மருந்து எப்போதும் கண்டுபிடிக்கப்படும்,” என்று அவர் கூறினார், ரஷ்யா பேட்ரியாட்டை செயலிழக்க செய்யும் என்று பெருமையாக கூறினார்.

“எனவே அதைச் செய்பவர்கள் அதை வீணாகச் செய்கிறார்கள். இது மோதலை நீடிக்கிறது, அவ்வளவுதான்.

போருக்கு நிதியளிக்கும் திறனைக் கட்டுப்படுத்தும் வகையில் ரஷ்ய எண்ணெய் மீது விலை வரம்பு விதிப்பதாக மேற்கத்திய நாடுகள் கூறிய போதும், ரஷ்ய பொருளாதாரத்தை சேதப்படுத்தாது என்றும் புடின் கூறினார். ரஷ்யாவின் பதிலைத் தெரிவிக்க அடுத்த வார தொடக்கத்தில் ஒரு ஆணையில் கையெழுத்திடுவேன் என்று அவர் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மீனவர் பிரச்சினைக்கு மனிதாபிமான முறையில் தீர்வு : இந்தியா – இலங்கை கூட்டறிக்கை

Pagetamil

நரேந்திர மோடி- அனுர சந்திப்பு!

Pagetamil

420Kg நபரின் இறுதிச்சடங்கிற்கு உதவிய தீயணைப்புத்துறை!

Pagetamil

இந்த நூற்றாண்டின் மோசமான சூறாவளியால் சின்னாபின்னமான பிரான்ஸ் தீவு: ஏராளமானவர்கள் பலி!

Pagetamil

ஈரானின் ஏவுகணை எரிபொருள் உற்பத்தியை குறைத்த இஸ்ரேல் தாக்குதல்

Pagetamil

Leave a Comment