உலககோப்பை கால்பந்தாட்டத்தின் இறுதிப் போட்டி நேற்று நடந்தது. இதேநாளில் அர்ஜெண்டினாவில் மெஸ்ஸியின் ரசிகனான மணமகனும், பிரான்ஸ் அணியின் ரசிகையான மணமகளும் திருமணம் செய்து கொண்டனர்.
மணமகன் மெஸ்ஸியின் சீருடை அணிந்திருந்தார். மணமகள் கைலியன் எம்பாவேயின் சீருடை அணிந்திருந்தார்.
கேரளா மாநிலத்தின் திருவனந்தபுரத்தில் இந்த திருமணம் நடந்தது.
உலகக் கோப்பை வரலாற்றில் மிக அற்புதமான ஆட்டங்களில் ஒன்றான கட்டாரின் லுசைல் ஸ்டேடியத்தில் இரு அணிகளும் சந்தித்த போட்டிக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, கொச்சி நகரில் நடைபெற்ற விழாவில் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
தங்களுடைய நகைகள் மற்றும் பாரம்பரிய திருமண உடையின் மேலாக அவர்கள் 10ம் எண் ஜெர்சியை அணிந்தனர். மணமகள் அதிரா பிரெஞ்சு முன்கள வீரர் கைலியன் எம்பாப்பேவின் சீருடை அணிந்திருந்தார், அதே சமயம் மணமகன் சச்சின் அர்ஜென்டினாவின் மெஸ்ஸியின் சீருடை அணிந்திருந்தார்.
அவர்கள் திருமணத்தை விரைவாக முடித்துக் கொண்டு, திருவனந்தபுரத்தில் உள்ள சச்சினின் வீட்டிற்கு திரும்பிச் சென்றுள்ளனர். காரணம், இறுதிப்போட்டியை காண வேண்டுமே!
மணமகன் சச்சின் இஸ்ரோ நிறுவனத்தில் விஞ்ஞானியாக பணிபுரிகிறார்.
இந்தியாவில் கிரிக்கெட்டிற்கே அதிக ரசிகர்கள் இருந்தாலும், கேரளாவில் கால்பந்திற்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். உலககோப்பை தொடங்கும் போதே நட்சத்திரங்களின் பெரியளவிலான கட்டவுட்களை வைத்திருந்தனர். சில நாட்களின் முன்னர் பிரேசிலின் நெய்மரும், கேரளாவில் தனது கட்அவுட் வைக்கப்பட்ட படத்தை பகிர்ந்திருந்தார்.
நேற்று அர்ஜென்டீனா வெற்றியீட்டியதை தொடர்ந்து நள்ளிரவில் பெருமளவானவர்கள் வீதிக்கிறங்கி கொண்டாடினர். பொலிசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க வேண்டியிருந்தது. இதில் பலர் காணமடைந்தனர்.