முக்கியச் செய்திகள்

‘மியான்மரில் வாழ முடியாது; பாதுகாப்பான நாட்டுக்கு அனுப்பி வையுங்கள்’: யாழில் கரையொதுங்கிய அகதிகள் கோரிக்கை!

வடமராட்சி கிழக்கு கடலில் மீட்கப்பட்ட மியன்மார் அகதிகள், தம்மை பாதுகாப்பான நாட்டிற்கு அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மியான்மரில் வாழ முடியாமல் மலேசியா நோக்கி பயணித்ததாகவும், தமது பாதுகாப்பான வாழ்க்கைக்கு உதவுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என 104 ரோஹிங்கியா அகதிகள், பாதுகாப்பான வாழ்க்கை தேடி மலேசியாவிற்கு ஆபத்தான கடல் பயணம் மேற்கொண்டிருந்தனர். அவர்கள் சென்ற படகு பழுதடைந்து நேற்று மாலை வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் ஒதுங்கினர்.

வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் உள்ளூர் மீனவர்களால் அடையாளம் காணப்பட்டனர்.

அவர்கள் இன்று காங்கேசன்துறை துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். அவர்கள் மருத்துவ பரிசோதனையின் பின்னர், அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஆண் ஒருவரும், 2 வயது குழந்தையும் மேலதிக சிகிச்சைக்காக தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை கடற்படை தளத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகள், தமது பாதுகாப்பான வாழ்க்கையை உறுதிப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர். மியான்மரில் வாழ முடியாமல் அகதிகளாக புறப்பட்டதாகவும் மலேசியாவில் தஞ்சமடைய உதவுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

‘தமிழ் பொதுவேட்பாளர் கோட்பாடு தோல்வியடைந்தால் எமது தலையீட்டை தமிழர்கள் இழப்பார்கள்… இதன் பின்னணியில் நாங்கள் இல்லை’: பிரதான தமிழ் கட்சிகளிற்கு தெளிவுபடுத்திய வெளிநாட்டு தூதரங்கள்!

Pagetamil

‘வீடுகளில் நாய்க்குட்டி, பூனைக்குட்டிகள் நிறைந்துள்ளன… குழந்தைகள் இல்லை’: குழந்தை பெற்றுக்கொள்ளுமாறு இத்தாலிய இளையவர்களிடம் போப் மன்றாட்டம்!

Pagetamil

ரி20 உலகக்கிண்ணத்துக்கான இலங்கை அணி அறிவிப்பு: வியாஸ்காந்த் மேலதிக வீரராக இணைப்பு!

Pagetamil

ஜனாதிபதி தேர்தல் காலத்தை அறிவித்தது தேர்தல் ஆணைக்குழு!

Pagetamil

தோல்வியடைந்த அரசியல்வாதிகளின் தமிழ் பொதுவேட்பாளரின் அபாயங்களும், சாத்தியமின்மைகளும்!

Pagetamil

Leave a Comment