வீதியில் வீசப்பட்டிருந்த 27 சடலங்கள்!

Date:

சாம்பியாவின் வீதியோரம் உயிரிழந்த 27 பேரின் சடலங்கள் வீசியெறியப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டது.

எத்தியோப்பியாவிலிருந்து சென்ற அகதிகளே உயிரிழந்தவர்கள் என்றும், அவர்கள் பசி மற்றும் சோர்வு காரணமாக இறந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் தலைநகரின் புறநகரில் உள்ள ஒரு விவசாயப் பகுதியில் வீசப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை பல சடலங்கள் வீசப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிசார் அங்கு சென்ற போது, ஒருவர் உயிருடன் காணப்பட்டார். அவர் சிகிச்சைக்காக லுசாகா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

27 பேர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். இறந்தவர்கள் அடையாளம் காண மற்றும் மரணத்திற்கான சரியான காரணத்தை தீர்மானிக்க பிரேத பரிசோதனைக்காக சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

முதற்கட்ட பொலிஸ் விசாரணையில் பலியானவர்கள் அனைவரும் 20 முதல் 38 வயதுக்குட்பட்ட ஆண்கள் என்றும், அடையாளம் தெரியாத நபர்களால் சாலையோரம் வீசப்பட்டவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

“காவல்துறை மற்றும் பிற பாதுகாப்பு பிரிவுகள் இந்த விஷயத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன,” என்று பொஸ் செய்தித் தொடர்பாளர் டேனி மவாலே தெரிவித்தார்.

எத்தியோப்பிய புலம்பெயர்ந்தோர் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளுக்குப் பயணம் செய்யும் போது பெரும்பாலும் சாம்பியாவைப் பயன்படுத்துகின்றனர். இருப்பினும் புலம்பெயரும் போது இறப்புகள் அரிதாகவே உள்ளன.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவ பாதுகாப்பு மோட்டார்சைக்கிள் இராணுவ ரோந்து நடவடிக்கையடுத்து – பரபரப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிசார் இணைந்து...

சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு : போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த மாடுகளுக்கு எதிராக பிரதேச சபை – பொலிஸார் இணைந்து நடவடிக்கை

பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்து, தொடர்ச்சியாக வீதி விபத்துகளுக்கும் விவசாயப் பயிர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்