27.9 C
Jaffna
April 8, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

விடுதலைப் புலிகள் எதிர்பார்த்த சூழல் இப்பொழுதுதான் அமைந்துள்ளது; ரணிலின் அழைப்பை நிபந்தனையின்றி ஏற்பவர்கள் தமிழர் தரப்பை வலுவிழக்க செய்வார்கள்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி!

விடுதலைப் புலிகள் எதிர்பார்த்த சூழல் இப்பொழுதுதான் அமைந்துள்ளது. இந்த காலப்பகுதியில் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

தமிழ் கட்சிகளுடனான கலந்துரையாடலுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பு குறித்து இன்று (11) யாழ்ப்பாணத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தமிழீழ விடுதலைப் புலிகள் பலமுறை இலங்கை பொருளாதாரத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தினார்கள். பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால், அரசாங்கம் இனப்பிரச்சினை தீர்விற்கு முயற்சிக்கும் என்பதால் புலிகள் அப்படி செயற்பட்டார்கள்.

புலிகள் எதை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தினார்களோ, அது இப்பொழுதுதான் நடந்துள்ளது. இந்த சமயத்தில் தமிழ் மக்கள் தமது முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு செயற்பட வேண்டும்.

பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக இருந்தால், சமஸ்டி அடிப்படையிலான தீர்வை பற்றி ஜனாதிபதி சிங்கள மக்களிடம் பகிரங்கமாக பேச வேண்டும். அப்படி நடக்காத பட்சத்தில் தமிழ் மக்கள் மீண்டும் ஏமாற்றப்படுவார்கள்.

இந்த சந்தர்ப்பத்தை தவறவிட்டால் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை ஒரு எல்லையை தாண்டி, எட்ட முடியாத இடத்திற்கு கொண்டு செல்லப்படும் அபாயமுள்ளது. ரணிலின் அழைப்பை ஏற்று, நிபந்தனையின்றி பேச்சில் கலந்து கொண்ட தரப்புக்கள்தான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

பிள்ளையான் கைது!

Pagetamil

கொழும்பு மாநகரசபை, பல யாழ் உள்ளூராட்சிசபைகளுக்கான தேர்தலுக்கு இடைக்கால தடை!

Pagetamil

முன்னர் ஒன்றாக வந்தீர்கள்… இப்போது மூன்றாக வந்துள்ளீர்கள்; தமிழர்களுக்கிடையிலானதே மீனவர் பிரச்சினை: மோடி- தமிழ் கட்சிகள் சந்திப்பில் பேசப்பட்டவை!

Pagetamil

இலங்கை- இந்தியாவுக்கிடையில் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

Pagetamil

நரேந்திர மோடிக்கு பெரும் வரவேற்பு!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!