மண்டூஸ் சூறாவளியால் குருநகரில் 30 படகுகள் சேதம்

Date:

சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட கடல் கொந்தளிப்பினால் குருநகர் பகுதி மீனவர்களின் 30க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

மண்டூஸ் சூறாவளியின் தாக்கம் காரணமாக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவர்களின் படகு இவ்வாறு அலையினால் அடித்து சேதமடைந்துள்ளது. அத்துடன் ஒரு படகு முற்றாக கடலில் மூழ்கியுள்ளது.

இதனால் மீனவர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

முப்பதுக்கு மேற்பட்ட மீனவர்களின் படகுகள் இவ்வாறு சேதமடைந்துள்ளதுடன் அவர்கள் கடற்றொழிலுக்கு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அத்துடன் சேமடைந்த படகுகளை திருத்துவதற்கான பொருளாதார ரீதியாக தம்மிடம் வசதி இல்லை என மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே அரசாங்கம் தங்களுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டுமென அவர்கள் வேண்டுகோள் விடுகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான தீர்மானத்துக்கு வரவேண்டும்! – இம்ரான் எம்.பி

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான தீர்மானம் ஒன்றுக்கு வரவேண்டும்...

இன்றைய ராசி பலன் | 11.08.2026

## 🔮 இன்றைய ராசி பலன் | 11.08.2026 ♈ மேஷம்: புதிய...

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ். கரன் நியமனம்

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்