அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஈவினைப் பகுதியில் நான்கரை லீற்றர் கசிப்புடன் சந்தேகநபர் ஒருவர் நேற்றையதினம் (09) கைது செய்யப்பட்டுள்ளார்.
காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிசாரினால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஈவினை பகுதியை சேர்ந்த 52 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்படுத்தி மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1