25.7 C
Jaffna
January 2, 2025
Pagetamil
இலங்கை

கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக மீண்டும் சரவணபவன் நியமனம்

கிளிநொச்சி வடமாகாண தொற்றுநோய் வைத்தியசாலையில் இடம்பெற்ற மோசடிகள்
தொடர்பான ஆரம்ப விசாரணைகள் மூலம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்
மீது குற்றம் காணப்பட்டதாக வடக்கு சுகாதார செயலாளர் மத்திய சுகாதார
அமைச்சின் செயலாளருக்கு கடித மூலம் அறிவித்ததைத் தொடர்ந்து
இடமாற்றப்பட்ட வைத்தியர் சரவணபவன் மீண்டும் கிளிநொச்சி பிராந்திய சுகாதார
சேவைகள் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி வடமாகாண தொற்றுநோய் வைத்தியசாலையில் இடம்பெற்ற மோசடிகள்
குறித்த ஆரம்ப விசாரணைகள் இன்னமும் முடிவடையவில்லை என மத்திய சுகாதார
அமைச்சுக்கு மாகாண உயரதிகாரிகள் எழுத்து மூலமாக அறிவித்ததை அடுத்து இந்த
மீள் நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கிளிநொச்சி வடமாகாண தொற்றுநோய் வைத்தியசாலையில் இடம்பெற்ற மோசடிகள்
தொடர்பில் ஆரம்ப புலனாய்வு மெற்கொள்வதற்காக கிளிநொச்சி மாவட்டச் செயலக
பிரதம உள்ளக கணக்காய்வாளர் வி.கலைச்செல்வனை தலைவராாவும், கிளிநொச்சி
சமூர்த்தி திணைக்களப் பணிப்பாளர் த.ஆரணி மற்றும் வடக்கு மாகாண சுகாதார
அமைச்சின் நிர்வாக உத்தியோகத்தர் ச.பிரசாத் ஆகிய இருவரையும்
உறுப்பினராகவும் கொண்ட மூவரடங்கிய விசாரணை குழு தமது விசாரணை அறிக்கையில் கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளர், அதன் முன்னாள் கணக்காளர், மற்றும் மூன்று உத்தியோகத்தர்களும் மீதும் குற்றம் புரிந்துள்ளதனை இனம்
கண்டுள்ளதாக தமது அறிக்கையினை சமர்பித்திருந்தனர்.

இந்த நிலையில் கணக்காளர் ஏற்கனவே இடமாற்றம் பெற்று சென்றுள்ள நிலையில் ஏனைய உத்தியோகத்தர்களில் இருவர் பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் பெற்று
சென்றுவிட்ட நிலையில் கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும்
விசாரணைகள் நிறைவு பெறும் தற்காலிக இணைப்பு வழங்கப்பட்டிருந்து. தற்போது
குறித்த தற்காலிக இணைப்பு இரத்துச் செய்யப்பட்டு மீண்டும் அவர்
கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உள்நாட்டு தேங்காய் எண்ணெய்க்கு 18% வரி – அரசின் மீது கடும் விமர்சனம்

east tamil

அரச அச்சுத் திணைக்கள உத்தியோகபூர்வ இணையத்தளம் வழமைக்கு திரும்பியது

east tamil

குளவி தாக்குததால் வைத்தியசாலையில் பரபரப்பு – 11 பேர் மீது குளவி கொட்டு

east tamil

இந்திய மீனவர்களுக்காக விளக்கமறியல் மேலும் நீடிப்பு

east tamil

பாதுகாப்பு அமைச்சில் பதவியேற்ற மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய

east tamil

Leave a Comment