வளிமண்டத்தில் எற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக மண்டூஸ் சூறாவளியால் யாழ். மாவட்டத்தில் பல்வேறு மரங்கள் முறிந்துள்ளதுடன் விவசாய நிலங்களில் உள்ள வாழையினங்களும் முறிந்துள்ளன.
இவ் சூறாவளி தாக்கத்தால் நேற்று இரவு யாழ். மத்திய வீதி, பலாலி வீதி மற்றும் கந்தர்மடச் சந்தியினை இணைக்கும் பிரதான வீதியில் சமண்டலை மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது.
இதனால் போக்குவரத்து செய்யும் பயணிகள் மிகவும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
மேலும் நீர்வேலி, கோப்பாய், புன்னலைக்கட்டுவன், புத்தூர், வசாவிளான், உரெழு உள்ளிட வாழைத்தோட்டங்களில் உள்ள வாழைமரங்களும், வாழைக்குலைகளும் பெரும் அளவு முறிந்து காணப்படுகின்றன.இதனால் விவசாயிகள் மிக அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
இதேவேளை, யாழ் மாவட்டத்தில் பரவலாக நேற்று மதியத்திலிருந்து மழை பெய்து வருகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1