2022 லங்கா பிரீமியர் லீக் போட்டித் தொடரின் மூன்றாவது போட்டியில் தம்புள்ளை அவுர அணியை 9 விக்கெட்டுக்களால் யாழ் கிங்ஸ் வீழ்த்தியது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற தம்புள்ளை அவுர அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய தம்புள்ளை அவுர அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை 121 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
துடுப்பாட்டத்தில் Jordan Cox அதிகபட்சமாக 43 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் மஹீஷ் தீக்ஷன மற்றும் விஜயகாந்த் வியாஷ்காந்த ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.
122 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய யாழ் கிங்ஸ் அணி 15.4 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி பெற்றுள்ளது.
துடுப்பாட்டத்தில் சதீர சமரவிக்ரம ஆட்டமிழக்காமல் 62 ஓட்டங்களையும் அவிஷ்க பெர்ணாட்டோ 51 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.