24.6 C
Jaffna
January 5, 2025
Pagetamil
இலங்கை

முல்லைத்தீவு கோட்டைக்கட்டியகுளம் பாடசாலையின் வரலாற்றில் முதல் தடவையாக பல்கலைகழகத்திற்கு மூவர் தெரிவு

முல்லைத்தீவு துனுக்காய் கல்வி வலயத்தின் கோட்டைகட்டியகுளம்
பாடசாலையிலிருந்து முதல் தடவையாக மூன்று மாணவர்கள் பல்கலைகழகத்திற்கு
தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அற்ற மிகவும் பின்தங்கிய
எல்லைப்புற கிராமமாக காணப்படுகின்ற குறித்த பாடசாலையிலிருந்து முற்று
முழுதாக பாடசாலை கல்வியை மட்டுமே பெற்ற மூன்று மாணவர்கள்
பல்கலைகழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டமை பாடசாலை சமூகத்தில் பெரும்
மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்காக பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் குறிப்பாக குறித்த மாணவர்களை நெறிப்படுத்திய ஆசிரியர் வே. திவாகரன் ஆகியோர் பாடசாலை சமூகம் தங்களது நன்றியினை தெரிவித்துள்ளனர்.

கோட்டைகட்டியகுளம் பாடசாலையில் 2016 இல் உயர்தரம் ஆரம்பிக்கப்பட்டது.
அந்த வகையில் கு.சுஜாந் 3B (மாவட்ட நிலை 83 கிழக்கு பல்கலைக்கழகம் கலைப்பீடம்)
சி்.சிறிமேனகன் 3B (மாவட்ட நிலை 89 கிழக்கு பல்கலைக்கழகம் கலைப்பீடம்)
ஜெ.யசிந்தன் 2BC (மாவட்ட நிலை 12 சிறிஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் விளையாட்டு
விஞ்ஞான முகாமைத்துவம்) ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் பாடசாலை தேசியமட்ட எறிபந்தாட்ட  வீரர்களாகவும் காணப்பட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாணவர்களிடையே சுவாச நோய்கள் பரவும் சாத்தியம்

east tamil

தரம் 5 புலமைப்பரிசில் விடைத்தாள் குறித்து வெளியான மதிப்பீட்டு தகவல்

east tamil

சுற்றுலா பறவைகளை கொன்று வியாபாரம் செய்ய முயன்ற சந்தேக நபர்கள் கைது

east tamil

வடக்கு மாகாணத்தில் சீரான பரம்பலின்மை – ஆளுநர் நா. வேதநாயகம்

east tamil

சிற்றி வன்பொருள் வர்த்தக நிறுவனம் மீது அவகீர்த்தி சுமத்தியதற்காக எம்.பி. மீது குற்றச்சாட்டு

east tamil

Leave a Comment