பருத்தித்துறை நகரசபை வரவு செலவு திட்டம் தோல்வியடைந்தது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள பருத்தித்துறை நகரசபைக்கான வரவு செலவு திட்டம் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.
இதில் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 7 வாக்குகளும், எதிராக 8 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் 4 உறுப்பினர்களும், ஈ.பி.டி.பி, தமிழ் விடுதலை கூட்டணி, சமத்துவ கட்சியின் சுயாதீன தரப்பின் தலா ஒவ்வொருவர் என 7 வாக்குகள் ஆதரவாக அளிக்கப்பட்டன.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 6 உறுப்பினர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு உறுப்பினர், ஈ.பி.டி.பியின் ஒரு உறுப்பினர் ஆகியோர் எதிர்த்து வாக்களித்தனர்.
இதன்படி 1 மேலதிக வாக்கால் வரவு செலவு திட்டம் தோல்வியடைந்தது.