பாராளுமன்ற உறுப்பினர்களின் நேர முகாமைத்துவம் மற்றும் ஒழுக்கம் தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று கேள்வி எழுப்பினார்.
“சில ஐக்கிய மக்கள் சக்தி எம்பிக்கள் வலுக்கட்டாயமாக எழுந்து பேசுகிறார்கள். இந்த எம்.பி.க்கள் குழு சபையில் மிகவும் ஒழுக்கமற்ற குழுவாகும்” என்று சபாநாயகர் கூறினார்.
“சபையின் ஒழுக்கத்தை பேண வேண்டியவர் தலைவர்தான்” என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
“எம்.பி.க்கள் ஒரு பிரச்சினையை எழுப்ப விரும்பினால் பேச அனுமதிக்கிறீர்கள். எனினும் ஒழுக்கத்தை பேணுவது தலைவரின் கடமையாகும்“ என்றார்.
எதிர்க்கட்சியினர் காலை நேரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பி நேரத்தை வீணடிப்பதாக அரசாங்கத்தின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்க கூறியதையடுத்து இந்த சர்ச்சை ஆரம்பமானது.
“எதிர்க்கட்சிகள் காலை நேரத்தில் கேள்விகளை எழுப்பி நேரத்தை வீணடிக்கின்றன, இதனால் அவர்கள் தங்கள் பேச்சுக்களை தொலைக்காட்சி செய்திகளில் ஒளிபரப்ப முடியும். இதனால், எம்.பி.,க்கள் பேசும் நேரத்தை இழப்பதால், சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சி உறுப்பினர்கள் பேசும் நேரம் கூட குறைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பிரச்சினையின் விளைவாக நாங்கள் இறுதி நேரத்தை நீட்டிக்க வேண்டியிருந்தது” என்று ரணதுங்க கூறினார்.




