28.4 C
Jaffna
February 1, 2025
Pagetamil
குற்றம்

கணவன் வெளிநாட்டில்; வீட்டுக்கு வந்த பேஸ்புக் காதலன் அனைத்தையும் உருவிக் கொண்டு ‘எஸ்கேப்’: நடுத்தெருவுக்கு வந்த பெண்!

முகநூல் காதலியின் வீட்டிற்கு சென்ற இளைஞன், அந்தப் பெண்ணுடன் உல்லாசமாக இருந்து விட்டு, வீட்டிலிருந்த நகை மற்றும் பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்துத் தப்பிச் சென்றார்.

வீட்டில் திருட்டு போனதையடுத்து, மனைவியின் முகநூல் காதல், வெளிநாட்டிலுள்ள கணவனிற்கு தெரிய வந்தது. மனைவியை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார்.

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அண்மையில் திருமணம் முடித்த இளைஞன், வெளிநாட்டில் பணிபுரிய சென்றுள்ளார். அம்பாந்தோட்டையின் பகுதியொன்றிலுள்ள கணவனின் பெற்றோர் வீட்டில் மனைவி தங்கியிருந்துள்ளார்.

மனைவியுடன் உரையாடுவதற்காக விலையுயர்ந்த ஸ்மார்ட் தொலைபேசியொன்றை கணவன் வாங்கிக் கொடுத்திருந்தார்.

அதிகமான நேரத்தை தொலைபேசியிலேயே செலவிடும் இளம் மனைவி, போலியான பெயரில் உருவாக்கிய பேஸ்புக் கணக்கின் மூலம் இளைஞன் ஒருவருடன் உறவை ஆரம்பித்துள்ளார்.

அவர்கள் தொடர்ந்து அரட்டையடித்துக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் காதலர்களாக மாறினர்.

வீட்டிலுள்ள மாமனாருக்கும், மாமியாருக்கும் தெரியாமல் இதனை கச்சிதமாக செய்து வந்தார்.

வீட்டை விட்டு வெளியில் வந்து தன்னை சந்திக்கும்படி பேஸ்புக் காதலன் தொடர்ந்து அழைப்பு விடுத்து வந்தார்.

எனினும், வெளிநாட்டிலுள்ள கணவர், தனது மனைவி தனியே வெளியே செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு விதித்திருந்தார். இதனால் பேஸ்புக் காதலனை சந்திக்க செல்ல முடியாமல் அவஸ்தைப்பட்டு வந்தார்.

கடந்த வார இறுதியில், மாமனாரும், மாமியாரும் மொனராகலையிலுள்ள தமது மகள் வீட்டிற்கு சென்றனர். மருமகளையும் தம்முடன் வருமாறு அழைத்தனர்.

எனினும், வீட்டில் நின்றால் பேஸ்புக் காதலனை சந்திக்கலாமென திட்டமிட்ட மருமகள், தனக்கு பயணம் செய்ய உடல்நிலை ஒத்துக்கொள்ளாமலுள்ளதாக கூறி, பயணத்தை தவிர்த்து விட்டார்.

வீட்டில் பத்திரமாக இருக்குமாறு கூறி, அதிகாலையிலேயே மாமனாரும், மாமியாரும் மகள் வீட்டிற்கு புறப்பட்டனர்.

மறுநாள் வீட்டில் யாருமிருக்க மாட்டார்கள், அதனால் வீட்டிற்கு வாருங்கள் என தனது பேஸ்புக் காதலனிற்கு மருமகள் அழைப்பு விடுத்திருந்தார்.

மறுநாள் காலையில் பேஸ்புக் காதலன் வீட்டிற்கு வந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த இளம் பேஸ்புக் காதலனை வீட்டிற்குள் அழைத்துச் சென்றுள்ளார்.

தனக்கு திருமணமாகி, கணவர் வெளிநாட்டிலுள்ள விவகாரத்தை பேஸ்புக் காதலி சொல்லியுள்ளார். நமது தெய்வீக காதலிற்குள் இதெல்லாம் ஒரு பிரச்சனையா?, கவலைப்படாதே என காதலன் கூறியது, பேஸ்புக் காதலியை கனவுலகில் சஞ்சரிக்க வைத்தது.

இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.

மதிய உணவு உண்ட பின்னர், இருவரும் குட்டித் தூக்கம் போட்டுள்ளனர். பேஸ்புக் காதலனின் அரவணைப்பில் மெய்மறந்து உறங்கிய இளம்பெண், நீண்டநேரத்தின் பின்னர் வீட்டில் பேச்சு சத்தம் கேட்டபோதுதான் விழித்தெழுந்தார்.

தனது மாமனாரும், மாமியாரும் வீட்டிற்கு வந்திருந்தனர். பேஸ்புக் காதலன் சிக்கப் போகிறாரே, அவர் எங்கேயென அந்தப் பெண் பதறிக்கொண்டு தேடினார். காதலன் இல்லை. எப்படியோ, மாமனார் குடும்பத்திற்கு தெரியாமல் காதலன் தப்பித்து விட்டார் என மருமகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி அறைக்கு திரும்பினார்.

அறை மேசையிலிருந்த மடிக்கணினியை காணவில்லை. தனது கையடக்க தொலைபேசியை காணவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெண், அலமாரியை திறந்து பார்த்த போது, அதற்குள்ளிருந்த தனது தங்க நகைகள் காணாமல் போனதை தெரிந்து கொண்டார். அதன் பின் பேஸ்புக் காதலனின் தொடர்பும் துண்டிக்கப்பட்டிருந்தது.

 

யாருக்கும் தெரியாமல் காதலனை வீட்டிற்கு அழைத்த மருமகள், கடைசியில் வேறு வழியின்றி மாமனாரிடமும், மாமியாரிடமும் நடந்த சம்பவங்களை கூறி, மன்னிப்பு கேட்டார்.

அவர்கள் உடனே தமது மகனிடம் விடயத்தை சொல்லியுள்ளனர்.

இதையடுத்து, மருமகளை தமது வீட்டிலிருந்து அவர்கள் வெளியேற்றி, பிறந்த வீட்டிற்கே அனுப்பி வைத்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாதம்பையில் கத்திக்குத்து தாக்குதல் – ஆண் உயிரிழப்பு, பெண் படுகாயம்

east tamil

கடித்துக் குதறிய கணவன்; மனைவிக்கு உதட்டில் 16 தையல்கள்

east tamil

உடுவில் பிரதேசத்தில் 330 லீற்றர் கோடாவுடன் ஒருவர் கைது!

Pagetamil

கணவனின் கொடூரம்: மனைவியை கொன்று, சமைத்து, எலும்புகளை உரலில் இடித்த அதிர்ச்சி சம்பவம்!

east tamil

யாழ்ப்பாண கோழி பிடித்த 3 பேர் கைது!

Pagetamil

Leave a Comment