29.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil
விளையாட்டு

ஈரானை வீழ்த்தி அடுத்த சுற்றிற்கு முன்னேறியது அமெரிக்கா!

கட்டார் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நேற்று அல் துமாமா ஸ்டேடியத்தில் நடந்த குரூப் பி ஆட்டத்தில் அமெரிக்கா 1-0 என்ற கோல் கணக்கில் ஈரானை வீழ்த்தி குரூப் 16 சுற்றுக்கு முன்னேறியது.

கிறிஸ்டியன் புலிசிக் கோல் அடித்தார். ஆனால், அவர்  ஈரான் கோல் கீப்பர் மீது மோதியதில் காயம் அடைந்தார்.

அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் மீண்டும் விளையாடத் தொடங்கினாலும், இரண்டாவது பாதியின் தொடக்கத்தில் அவர் மாற்றப்பட்டார்.

ஆட்டத்திற்குப் பிறகு, புலிசிக் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டா. ஆனால் பயிற்சியாளர் கிரெக் பெர்ஹால்டரின் காயம் குறித்து உடனடித் தகவல் எதுவும் இல்லையென்றார்.

இந்த வெற்றியின் மூலம், குரூப் பி இல்  5 புள்ளிகளுடன் அமெரிக்கா இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இங்கிலாந்து 7 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. குரூப் 16 ஆட்டத்தில், சனிக்கிழமையன்று அமெரிக்கா, நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.

அமெரிக்கா 2002 க்குப் பிறகு காலிறுதிக்கு சென்றதில்லையென்ற வரலாறு மாற்றப்படுமா என்பது அன்று தெரிய வரும்.

ஈரான் புள்ளிகளுடன் குழுவில் மூன்றாவது இடத்தைப் பிடித்ததால், தொடரிலிருந்து வெளியேறுகிறது.

“இந்த முடிவுடன் கனவு முடிந்துவிட்டது” என்று ஈரான் பயிற்சியாளர் கார்லோஸ் குய்ரோஸ் கூறினார். “அமெரிக்கா எங்களை விட விளையாட்டை மிகவும் சிறப்பாகத் தொடங்கியது, விளையாட்டின் சிறந்த கட்டுப்பாட்டுடன் விரைவாக இருந்தது.”

அமெரிக்கா மற்றும் ஈரான் அரசுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் போட்டியை சுற்றி அதிக பதற்றம் நிலவியது. 1998 ஆம் ஆண்டு பிரான்சில் நடந்த போட்டியில் ஈரானியர்கள் அமெரிக்காவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, அமெரிக்கர்களை வெளியேற்றினர்.

மற்ற குரூப் பி போட்டியில் இங்கிலாந்து வேல்ஸை விட முன்னிலையில் இருந்ததால், போட்டி சமனிலையில் முடிந்தாலே அடுத்த சுற்றிற்கு செல்ல ஈரானிற்கு வாய்ப்பிருந்தது. எனினும், ஈரானால் கோலடித்து ஆட்டத்தை சமனிலைப்படுத்த முடியவில்லை.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் விரைவில்

Pagetamil

இலங்கையின் முதல் டெஸ்ட்… 1996 உலகக் கோப்பை கப்டனின் உதயம்

Pagetamil

புரட்டியெடுக்கும் அவுஸ்திரேலியா: காலியில் கதிகலங்கி நிற்கும் இலங்கை!

Pagetamil

அவுஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம்: இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னர் சம்பியன்

Pagetamil

என் மகளுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை!

Pagetamil

Leave a Comment