30.5 C
Jaffna
April 24, 2025
Pagetamil
இலங்கை

வடக்கில் மழை பெய்யலாம்!

வடக்கு மாகாணத்தில் பல தடவைகள் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனி மூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மழை நிலைமை : மன்னாரில் இருந்து காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல தடவைகள் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடல் நிலை : நாட்டைச் சூழவுள்ளகடற்பரப்புகள் சாதாரண அலையுடன் காணப்படும்.

இதையும் படியுங்கள்

நீதிமன்ற வழக்கு பொருளான வெளிநாட்டு சாராயங்கள் தேநீராக மாறிய அதிர்ச்சி சம்பவம்

Pagetamil

யாழ் மாநகரசபை உள்ளிட்ட சில சபைகளில் தமிழரசு கட்சியை ஆதரிக்க தயாராகும் மணி அணி!

Pagetamil

கொழும்பில் சூட்கேஸில் மீட்கப்பட்ட கார்த்திகாவின் உடல்: கிருஷ்ணராஜாவுக்கு மரணதண்டனை!

Pagetamil

இனி ஹெல்மெட்டுடன் திரிந்தால் சிக்கல்: பொலிசாரின் புதிய அறிவிப்பு

Pagetamil

யாழில் தபால்மூல வாக்களிப்புக்கு ஏற்பாடுகள் தயார்!

Pagetamil

Leave a Comment