மன்னார் பண்டிவிரிச்சான் துயிலுமில்லத்தில் மாவீரர் அஞ்சலி

Date:

மாவீரர் தினத்தையொட்டி மன்னாரில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் நினைவு தினம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (27) மாலை நினைவு கூறப்பட்டுள்ளது.

தமிழர் தாயகத்திற்கு உயிர் நீத்த உறவுகளை நினைவு கூறும் வகையில் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மாவீரர் தினம் வருடா வருடம் நினைவு கூறப்பட்டு வருகிறது.

அதற்கு அமைவாக மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (27) மாலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

மேலும் மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் இடம் பெற்றது.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையிலான தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தவெக வசம் 105+ இடங்கள் – திமுக, அதிமுகவுக்கு அதிர்ச்சி

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், தற்போதைய நிலவரப்படி தவெக 109, திமுக...

கேரளாவில் ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ் கூட்டணி – இடதுசாரிகளுக்கு படுதோல்வி!

கேரளாவில் 90-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றும் நிலையில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட மொட்டு உறுப்பினர் கைது!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த முன்னாள் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர் ஒருவர்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்