கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்தில் பேரெழுச்சியுடன் அஞ்சலி

Date:

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நிரம்பி வழிந்த பொது
மக்களால் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார்கள்

கிளாநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வெழுச்சியுடன்
மாவீரர்களது உறவினர்கள் மற்றும் பொதுமக்களால் 2022 மாவீரர் நாள்
அஞ்சலிகள் செலுத்தப்பட்டன

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் வளாகம் சிவப்பு மஞ்சள் கொடிகளால்
அலங்கரிக்கப்பட்டு மாவீரர்களை நினைவு கூறும் தாயக பாடல்கள் ஒலிக்கப்பட்டு
அந்த வளாகம் உணர்வுபூர்வமாக காணப்பட்டது

தமிழ் மக்களின் விடுதலைக்காக தங்கள் இன்ணுயிர்களை தியாகம் செய்த
மாவீரர்களது பெற்றோர்கள் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டு
கண்ணீருடன் மாவீரர்களுக்கான தங்களது அஞ்சலி செலுத்தினார்கள்

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் வளாகம் பொது மக்களால் நிரம்பி
வழிந்தது அவர்கள் கண்ணீருடன் மலர் தூவி விளக்கேற்றி அஞ்சலி
செலுத்தினார்கள்

மணி ஓசை எழுப்பப்பட்டு ஆறு ஐந்து மணிக்கு பொதுச்சுடரினை மூத்த போராளியும், மாவீரரின் தந்தையுமான பசீர் காக்கா ஏற்றி வைத்தார் . அதனை தொடர்ந்து ஏனைய சுடர்களும் ஏற்றப்பட்டன

கோட்டாபாய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் கடந்த வருடங்களில் தடை
செய்யப்பட்டிருந்த மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வு ரணில் விக்கிரமசிங்க
ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் மீண்டும் இடம்பெற்றது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

யாழில் இருந்து தமிழகம் சென்றபோது நடுக்கடலில் பழுதான கப்பல்: 7 மணி நேரமாக 144 பயணிகள் தவிப்பு

காங்கேசன்துறை- தமிழகத்தின் நாகப்பட்டினம் இடையே இயக்​கப்​படும் கப்​பலின் இயந்திரம் பழு​தான​தால் நடுக்​கடலில்...

தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் நாளை பதவியேற்பு!

ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கையுடன் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை, தவெக...

யாழ் போதனா வைத்தியசாலை தீ விபத்து; பெருமளவு மருந்துகள் அழிவு… மின் ஒழுக்கு காரணம்?: யாழில் தீயணைப்பு வசதி இல்லாததை வெளிச்சமிட்ட சம்பவம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏற்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்