யாழில் இருந்து தமிழகம் சென்றபோது நடுக்கடலில் பழுதான கப்பல்: 7 மணி நேரமாக 144 பயணிகள் தவிப்பு

Date:

காங்கேசன்துறை- தமிழகத்தின் நாகப்பட்டினம் இடையே இயக்​கப்​படும் கப்​பலின் இயந்திரம் பழு​தான​தால் நடுக்​கடலில் 144 பயணி​கள் சுமார் 7 மணி நேர​மாக தவித்​தனர். இதையடுத்​து, பயணிகள் கப்பலை படகு மூலம் கயிறு கட்டி கரைக்கு இழுத்து வரப்​பட்​டது.

காங்​கேசன்​துறை- நானை இடையே தனி​யார் நிறு​வனம் சார்​பில் பயணி​கள் கப்​பல் போக்​கு​வரத்து நடை​பெற்று வரு​கிறது. 3 மணி நேர கடல் பயணம் என்​ப​தால் இந்​திய, இலங்கை சுற்​றுலா பயணி​கள் இந்த கப்​பலை பயன்​படுத்தி வரு​கின்​றனர். இந்த நிலை​யில் நேற்று முன்​தினம் பிற்​பகல் 2 மணிள​வில் காங்​கேசன்​துறை​யில் இருந்து 141 பயணி​களு​டன் இந்​தக் கப்​பல் நாகை நோக்கி புறப்​பட்​டது.

நடுக்​கடலில் வந்​த​போது இயந்திரத்தில் திடீரென பழுது ஏற்​பட்​டது. இதையடுத்​து, கப்​பல் ஊழியர்​கள் பழுதை சரிசெய்​யும் பணி​யில் ஈடு​பட்​டனர். ஆனால், நீண்ட நேரம் போராடி​யும் பழுதை சரி செய்ய முடிய​வில்​லை. இதனால் நடுக்​கடலில் சுமார் 7 மணி நேர​மாக தவித்த பயணி​கள் பலருக்​கும் உடல் உபாதைகள் ஏற்​பட்​டன.

இதுதொடர்​பாக நாகை துறை​முகத்​துக்கு தகவல் தெரிவிக்​கப்​பட்​டது. இதையடுத்து மீன்​பிடி படகு​களை எடுத்​து வந்த மீனவர்​கள், பயணி​கள் கப்​பலை கயிறு கட்டி துறை​முகத்​துக்கு இழுத்து வந்​தனர்.

இதனால், நேற்று முன்​தினம் மாலை 5 மணிக்கு வர வேண்​டிய கப்​பல் இரவு 11 மணிக்கு வந்தது. அனை​வருக்​கும் மருத்​து​வக் குழு​வினர் சிகிச்சை அளித்தபிறகு, அவர​வர் சொந்த ஊருக்கு புறப்​பட்​டுச் சென்​றனர்.

இந்​நிலை​யில், காங்கேசன்துறை- நாகை இடையே​யான இரு​வழி கப்​பல் போக்​கு​வரத்து தற்​காலிக​மாக நிறுத்​தப்​பட்​டுள்​ளது.கடந்த சில நாட்​களாக அவ்​வப்போது இதுபோன்று நடப்பதாகவும் இதை சரிசெய்யவேண்டும் என்றும் பயணிகள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் நாளை பதவியேற்பு!

ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கையுடன் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை, தவெக...

யாழ் போதனா வைத்தியசாலை தீ விபத்து; பெருமளவு மருந்துகள் அழிவு… மின் ஒழுக்கு காரணம்?: யாழில் தீயணைப்பு வசதி இல்லாததை வெளிச்சமிட்ட சம்பவம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏற்பட்ட...

தவெகவுக்கு விசிக ஆதரவு அளிக்க 2 காரணங்கள்… – திருமாவளவன் விவரிப்பு

தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சி வரக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்