26.5 C
Jaffna
January 16, 2025
Pagetamil
இலங்கை

காரைநகர் பிரதேசசபை பாதீடு நிறைவேறியது!

காரைநகர் பிரதேச சபையின் 2023 க்கான பாதீடு இன்று 23.11.2022 ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது

சுமார் 555 இலட்ச ரூபாவுக்கு இம்முறை பாதீடு தயாரிக்கப்பட்டதோடு காரைநகரின் 6 வட்டாரங்களுக்கும் சமமாக அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதுடன்.வருமானங்களை அதிகரிப்பதற்கான மூலோபயங்களும் முன்வைக்கப்பட்டது.

2022 பாதீட்டுடன் ஒப்பிடும்போது இம்முறை பாதீட்டு தயாரிப்புக்கான நிதி 100 சதவிகித அதிகரிப்பாகும்.

இன்றைய பாதீட்டில் எம்முடன் சுயேட்சை குழு உறுப்பினர் மூவரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் இருவரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் ஒருவரும் சபையில் பிரசன்னமாகியிருந்தனர்

ஐக்கியதேசியக்கட்சி உறுப்பினர்கள் இருவர் சபைக்கு சமூகமளிக்காத நிலையில் உபதவிசாளர் பாதீட்டை முன்மொழிய ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர் வழிமொழிய பாதீடு ஏகமனதாக நிறைவேறியது.

முன்னதாக உறுப்பினர்கள் அனைவரும் யுத்தத்தால் மரணித்த எமது உறவுகளுக்கு மாவீரர் வாரத்தை முன்னிட்டு சுடரேற்றி அஞ்சல் செலுத்தினர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இந்திய உயர் ஸ்தானிகர் – நாமல் ராஜபக்ச முக்கிய பேச்சுவார்த்தை

east tamil

மல்வத்து ஒயாவில் காணாமலான இளைஞன் – தேடுதல் நிறுத்தம்

east tamil

Update – மாணவியை கடத்தியவர்களுக்கு நீதிமன்ற உத்தரவு

east tamil

பொடி லெஸ்ஸி இந்தியாவில் கைது!

Pagetamil

கரையொதுங்கிய மர்ம படகில் 18 புத்தர் சிலைகள் மீட்பு

east tamil

Leave a Comment