மீரிகம – பஸ்யால வீதியில் கொட்டகந்த சந்திக்கு அருகில் நேற்று (14) இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கலேலிய பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடைய ஒருவரும் அவரது 14 வயது மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மீரிகமவில் இருந்து பஸ்யால நோக்கி பயணித்த காரொன்று வீதியில் பயணித்த தந்தையையும், மகளையும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
கல்வி நிலையத்திலிருந்து திரும்பிய மகளை, தந்தை ஏற்றிச்சென்ற போதே இந்த விபத்து நடந்தது.
விபத்தையடுத்து. தப்பிச் சென்ற காரின் சாரதியை பல்லேவெல பொலிஸார் கைது செய்து வைத்திய பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போது அவர் மது அருந்தியிருந்தது தெரியவந்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1