இன்றையதினம் (14) இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளவாலை பகுதியில் 21 லீட்டர் கசிப்புடன் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட அதிரடி சுற்றிவளைப்பு நடவடிக்கையில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 27 வயதுப் பெண் 16 லீட்டர் கசிப்புடனும், 42 வயதுப் பெண் 5 லீட்டர் கசிப்புடனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள், மீட்கப்பட்ட கசிப்புடன் இளவாலை பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1