மன்னார் நீதிமன்ற வளாகத்தில் இருந்த பல பொருட்களை திருடிய குற்றச்சாட்டில், நீதிமன்ற பாதுகாவல் கடமையிலிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை மன்னார் பொலிஸார் சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.
இந்த திருட்டுக்கு அவருக்கு உதவிய குற்றச்சாட்டில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரும் கைதானார்.
நவம்பர் 11ஆம் திகதி இரவு இந்தத் திருட்டு நடந்துள்ளது.
நீதிமன்ற வளாகத்தில் இருந்த பல மர கதவு பிரேம்களை பொலிஸ் கான்ஸ்டபிள் திருடியதாக கூறப்படுகிறது. இந்த பொருட்களை அவர் நீதிமன்றத்தில் இருந்து திருடி நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள வீட்டில் மறைத்து வைத்திருந்தார்.
மன்னார் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் முச்சக்கர வண்டி சாரதி ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதோடு திருடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.




