சந்தேகநபரை விடுவிக்க யாழ் பொலிஸ் உத்தியோகத்தர் இலஞ்சம் வாங்கினாரா?: விசாரணைகள் ஆரம்பம்!

Date:

யாழ்ப்பாணம் பொலிஸில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவர், சந்தேக நபரை விடுவிக்க அவரது உறவினர்களிடம் இருந்து 80,000 ரூபாய் இலஞ்சம் கோரியதாக தெரிவிக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் இளவாலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த சந்தேக நபர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். நவம்பர் 11 அன்று இந்த கைது இடம்பெற்றது.

சந்தேக நபரை விடுவிக்க கான்ஸ்டபிள் லஞ்சம் கோரியதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முதற்கட்டமாக, ரூ. 40,000 சந்தேக நபரின் உறவினர்களால் கான்ஸ்டபிள் கொடுத்த வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டதாகவும், பின்னர், ரூ.20,000 பெற்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

சந்தேக நபரின் உறவினர் ஒருவர் இலஞ்சம் பெறுவதாக சனிக்கிழமை (12) முறைப்பாடு செய்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

ஃப்ளைதுபாய் துணை விமானி கோடரி மூலம் பயங்கரவாத தாக்குதல்

Flydubai விமானம் FZ1073-இன் துணை விமானி, விமானப் பயணத்தின்போது ஒரு "பயங்கரவாத"...

1 Kg கோழி இறைச்சி இலஞ்சமாக கேட்ட பொலிஸ்காரர் பணி இடைநீக்கம்!

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவருக்குப் பொலிஸ் பிணை வழங்குவதற்காக ஒரு கிலோகிராம்...

வெளிநாட்டு பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய முச்சக்கர வண்டி சாரதிக்கு 10 வருட சிறை!

வேலைவாய்ப்பு தருவதாகக் கூறி இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்