சானியா மிர்சா மற்றும் சோயப் மாலிக் தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் மலிக் இருவரும் கடந்த 2010ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு நான்கு வயது நிரம்பிய இஷான் என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில், இந்த நட்சத்திர தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
அவர்களின் பிளவுக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை.
இந்த ஜோடி சில காலமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சானியா மிர்சாவின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:- “உடைந்த இதயங்கள் எங்கே செல்கின்றன. அல்லாவை தேடி…” என்று பதிவிட்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, அவர் தனது மகனுடன் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துகொண்டார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:- “கடினமான நாட்களை கடந்து செல்லும் தருணங்கள்…” என்று பதிவிட்டார்.
சானியா மிர்சாவின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவின் படி, சோயப்புக்கும் சானியாவுக்கும் இடையேயான உறவு சரியில்லை என்று தெரிகிறது. ஆனால், இது குறித்து இருவரும் கருத்து தெரிவிக்கவில்லை.