விபத்தில் உயிரிழந்த யாசகரிடம் ரூ.135,000 பணம், 5 வங்கிப் புத்தகங்கள்!

Date:

புத்தளம் – சிலாபம் வீதியில் கடந்த வார இறுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த யாசகர் ஒருவரிடம் 135,000 ரூபா பணம் இருந்ததாகவும் அவரது பெயரில் ஐந்து வங்கிக் கணக்குப் புத்தகங்கள் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் – சிலாபம் வீதியில் ஆனைவிழுந்தான் பகுதியில் சனிக்கிழமை (05) மோட்டார் சைக்கிளில் மோதியதில் உடப்புவ பிரதேசத்தைச் சேர்ந்த கதிரேசன் பாலமுருகன் (49) என்பவரே உயிரிழந்துள்ளார்.

ஆனைவிழுந்தான் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிலாபம் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.

அவரது பையை சோதனை செய்ததில் ரூ.135,000 பணம் மற்றும் ரூ.47,000 மதிப்புள்ள அவரது கணக்குகளின் வங்கி புத்தகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

விசாரணையில் அவர் பல வருடங்களாக யாசகராக வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பான விசாரணைகளை ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என்.கிர்த்திபால மேற்கொண்டு வருகிறார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பயணப்பொதிக்குள் பெண்ணின் சடலம்

சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 79 வயதுடைய மூதாட்டி ஒருவர் கொடூரமாகக்...

ஏறாவூரில் துப்பாக்கி மீட்பு

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மிச்சிநகர் ரெட்பானா வீதியிலுள்ள காணி ஒன்றில் வீடு...

“தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பை தவெக அரசு கண்டும் காணாமல் அமைதி காப்பது ஏன்?” – கனிமொழி

‘தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளிக்காமல் அவமதிக்கப்பட்டதை, தவெக அரசு கண்டும் காணாமல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்