25.7 C
Jaffna
January 11, 2025
Pagetamil
இலங்கை

யாழில் இன்று முதல் புதிய இராணுவச்சோதனைச்சாவடிகள்!

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் முயற்சியாக இன்றிலிருந்து ராணுவத்தினரால் முக்கியமான இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து வீதியால் பயணிப்போரை சோதனையிட உள்ளதாக யாழ்ப்பாண ராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர தெரிவித்தார்,

யாழ்ப்பாணத்தில் போதை பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து இந்த போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிட்டு, அண்மையில் விஜயம் மேற்கொண்ட நீதி அமைச்சர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநரால் போதை பொருள் பாவனையை கட்டுப்படுத்துவது தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் இடம்பெற்றிருந்தது.

அதன்படி, வடக்கு மாகாண ஆளுநரின் பரிந்துரைக்கு அமைய இன்று முதல் யாழ்ப்பாணத்தின் முக்கியமான இடங்களில் இராணுவத்தினரால் சோதனை சாவடி அமைக்கப்பட்டு போதை பொருள் விநியோகம் மற்றும் போதை பொருள் பாவிப்போர் கைது செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் போதை பொருள் விற்பனை செய்வோர் மற்றும் ப
போதை பொருள் பாவி ப்போர் தொடர்பில் ஏதாவது தகவல்கள் தெரிந்தால் பொதுமக்கள் அருகில் உள்ள இராணுவ முகாமில் தகவல்களை தெரிவிக்கும் இடத்தில் குறித்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்ய உதவியாக இருக்கும் என்றார்.

அத்துடன், இன்றிலிருந்து யாழ்ப்பாணத்தில் போதை பொருளை கட்டுப்படுத்தும் முகமாக இராணுவத்தினரால் முக்கிய இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும். எனவே பொதுமக்கள் இந்த விடயத்திற்கு நமக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். நமது எதிர்கால சந்ததியினரை போதைக்கு அடிமையாக்குவதற்கு நாங்கள் இடமளிக்காது போதைப்புக்கு அடிமையானவர்களை இனம் கண்டு அவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கவே சோதனை சாவடிகள் அமைக்கப்படுகின்றன. எனவே பொதுமக்கள் யாழ்ப்பாணத்தில் போதை பொருள் பாவனையினை குறைப்பதற்கு எமக்கு முழு ஒத்துழைப்பினையும் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பருத்தித்துறை மரக்கறி சந்தை வியாபாரிகளின் அதிருப்தி

east tamil

போதையில் வண்டியை செலுத்தியமைக்கு தண்டம் 25000/

east tamil

கிளிநொச்சி வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தால் 100 பொங்கல் பானைகள் வழங்கி வைப்பு

Pagetamil

கனகபுரம் துயிலுமில்லத்தை கைப்பற்றும் முயற்சி தோல்வி

east tamil

சீதுவவில் இந்திய பிரஜை தூக்கில் மரணம்

east tamil

Leave a Comment