பிக்பாஸை விட்டு வெளியேறியது ஏன்?: ஜி.பி.முத்து!

Date:

நடிகை சன்னி லியோனுடன் படம் நடித்தது சிறப்பான அனுபவம் எனவும் அவர் தன்னை பார்த்து க்யூட் எனக் கூறிய போது சிலாகித்துப் போனேன் என்றும் ரிக்ரொக் பிரபலம் ஜிபி முத்து தெரிவித்துள்ளார்.

கோவையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த ஜிபி முத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “ரிக்ரொக் மூலம் அறிமுகமாகி ஊடகங்களின் துணையுடன் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறேன். திரைத்துறையில் சிறந்த ஒத்துழைப்பு இருக்கிறது. பிக் பாஸ் அனுபவம் சிறப்பாக இருந்தது. பிக் பாஸ் மூலம் நடிகர் கமல்ஹாசனை சந்தித்தது மிக பெரும் பாக்கியம்.

எனது குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தால் பிக் பாஸை விட்டு வெளியேறினேன்.

தற்போது ஐந்து திரைப்படங்களில் நடித்து வருகிறேன். நடிகை சன்னி லியோனுடன் திரைப் படத்தில் நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.நான் அவரைப் பார்த்து ஐ லவ் யூ கூறியவுடன் அவர் தன்னை பார்த்து கியூட் என கூறிய போது சிலாகித்து போனேன்.

கோவையில் யூடியூபர் டிடிஎஃப் வாசன் உடன் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்றது போன்று இதுவரை தான் யாருடனும் சென்றதில்லை. இந்த சம்பவத்திற்கு பிறகு இனிமேல் யாருடனும் செல்ல மாட்டேன்” எனக் கூறினார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பயணப்பொதிக்குள் பெண்ணின் சடலம்

சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 79 வயதுடைய மூதாட்டி ஒருவர் கொடூரமாகக்...

ஏறாவூரில் துப்பாக்கி மீட்பு

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மிச்சிநகர் ரெட்பானா வீதியிலுள்ள காணி ஒன்றில் வீடு...

“தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பை தவெக அரசு கண்டும் காணாமல் அமைதி காப்பது ஏன்?” – கனிமொழி

‘தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளிக்காமல் அவமதிக்கப்பட்டதை, தவெக அரசு கண்டும் காணாமல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்