வங்கித் தடையை தளர்த்துங்கள்: உக்ரைன் தானிய ஏற்றுமதியை மீள ஆரம்பிக்க ரஷ்யா விதித்த நிபந்தனை!

Date:

உக்ரைனில் இருந்து உணவு ஏற்றுமதிக்கான ஒப்பந்தத்தை நீட்டிக்கும் பேச்சுவார்த்தையின் போது ரஷ்யா முன்வைத்த நிபந்தனை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்ய தானிய ஏற்றுமதியை எளிதாக்குவதற்கு, அரச விவசாய கடன் வழங்கும் Rosselkhoz bank மீதான கட்டுப்பாடுகளை மேற்கு நாடுகள் தளர்த்த வேண்டும் என்று ரஷ்யா நிபந்தனை விதித்துள்ளது.

கருங்கடல் ஊடான பாதுகாப்பான தானிய நடைபாதையில் பங்கேற்பதை கடந்த ஒக்ரோபர் இறுதியில் ரஷ்யா நிறுத்தியது. ஆனால் நான்கு நாட்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்தது

இதனால், உலகளாவிய உணவுப் பணவீக்கம் பரவிய நேரத்தில் முக்கிய விநியோகஸ்தரான உக்ரைனிடமிருந்து தானிய ஏற்றுமதிக்கு மேலும் இடையூறுகள் ஏற்படும் என்ற அச்சத்தை தளர்த்தியது.

ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஐக்கிய நாடுகள் சபையின் மத்தியஸ்தத்துடனான ஒப்பந்தத்தை மீண்டும் செயற்படுத்த, ரஷ்யாவின் உரிமையை நிபந்தனையாக்கியுள்ளார், அதே நேரத்தில் ஐ.நா தலைவர் அன்டோனியோ குட்டரெஸ், நவம்பர் 19 அன்று ஒப்பந்தம்  காலாவதியானாலும், அதை தொடருமாறு சம்மதிக்க ரஷ்யாவை வலியுறுத்தி வருகிறார்.

இந்த விஷயத்தின் உணர்திறன் காரணமாக அடையாளத்தை வெளிப்படுத்த மறுத்த நான்கு ஆதாரங்கள், மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் இருந்தபோதிலும், அரசு கடன் வழங்கும் Rosselkhoz bank வங்கிகளுடன் அதன் உறவுகளை மீட்டெடுக்க அனுமதிக்குமாறு ரஷ்யா மேற்கத்திய நாடுகளை கேட்டுக்கொள்வதாக தெரிவித்தன.

இதன் மூவம், இதுவரை சர்வதேச தானிய வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்காத வங்கியை ரஷ்ய தானியங்கள் மற்றும் பிற உணவுப் பொருட்களுக்கான பணம் செலுத்த அனுமதிக்கும் என்று இரண்டு ஆதாரங்கள் மேலும் தெரிவித்தன.

சமீபத்திய தடைகளுக்கு முன், இத்தகைய கொடுப்பனவுகள் சர்வதேச வங்கிகள் மற்றும் சுவிட்சர்லாந்தில் உள்ள பிற ரஷ்ய வங்கிகளின் துணை நிறுவனங்களால் கையாளப்பட்டன.

ரஷ்யாவின் முன்மொழிவுகளுக்கு என்ன பதில் கிடைத்தது என்பதை ஆதாரங்கள் தெரிவிக்கவில்லை.

உக்ரைனில் தனது சிறப்பு இராணுவ நடவடிக்கை என்று அழைக்கப்படும் அதன் தொடக்கத்திற்குப் பிறகு விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள், உணவுக் கப்பல்களிற்கு விலக்கு அளிக்கப்பட்டாலும் கூட. ரஷ்ய தானியங்கள் மற்றும் உர வணிகர்களுக்கு பணம் செலுத்துவதையும் கப்பல்கள், காப்பீடு மற்றும் துறைமுகங்களை அணுகுவதையும் கடினமாக்குகின்றன,

இது குறித்து, ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம், Rosselkhoz bank, ஐ.நா தரப்பு உடனடியாக பதிலளிக்கவில்லை.

எனினும், பெயரை வெளிப்படுத்தாத ஐ.நா ஆதாரமொன்று தகவல் வெளியிடுகையில், Rosselkhoz bank மூலம் ரஷ்ய உணவு மற்றும் உரத்திற்கான கொடுப்பனவுகளை எளிதாக்குவது பற்றி ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற தரப்புக்களுடன் விவாதிக்கப்படுகிறது. ஐரோப்பிய ஆணையம் உடனடியாக பதிலளிக்கவில்லை என தெரிவித்தது.

கருங்கடல் தானிய ஒப்பந்தத்தை நீட்டிப்பதற்கான தனது ஒப்புதல், அதன் சொந்த தானியங்கள் மற்றும் உர ஏற்றுமதிக்கான ஆதரவைப் பொறுத்தது என்று ரஷ்யா ஏற்கெனவே கூறியுள்ளது.

ரஷ்யா ஒரு பெரிய விவசாய உற்பத்தியாளர் மற்றும் உலகின் மிகப்பெரிய கோதுமை ஏற்றுமதியாளர்.

உக்ரைன் தானியங்கள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் தாவர எண்ணெய்களின் மிகப்பெரிய உற்பத்தி நாடுகளில் ஒன்றாகும். மோதல் மற்றும் கருங்கடல் மீதான ரஷ்யாவின் கட்டுப்பாட்டின் மூலம் ஜூலை வரை உலக சந்தைகளுக்கு ஏற்றுமதி தடைசெய்யப்பட்டது, .

நவம்பர் 2 அன்று ரஷ்யா ஒப்பந்தத்தை மீண்டும் தொடங்கியது, துருக்கியின் மத்தியஸ்தத்தைத் தொடர்ந்து, ரஷ்யா முடிவை மாற்றிக் கொண்டது.

மேற்கத்திய இராஜதந்திரி ஒருவர், பேச்சுவார்த்தையில் துருக்கி ரஷ்யாவின் மீது பெரிதும் சாய்ந்திருப்பதாகவும், Rosselkhoz bank விவாதத்தின் ஒரு பகுதியாக இருந்ததாகவும் கூறினார்.

பெப்ரவரியில் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்த பின்னர் சமீபத்திய மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டதிலிருந்து பாரம்பரியமாக வர்த்தகத்தை கையாண்ட சுவிஸ் வங்கிகள் தயக்கத்தை வெளிப்படுத்தின. உக்ரைன் நெருக்கடிக்கு முன்னர், Rosselkhoz bank முக்கியமாக ரஷ்ய விவசாயிகளுக்கு கடன்களை வழங்கியது.

ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் செயலாளரும் புதினின் கூட்டாளியுமான நிகோலாய் பட்ருஷேவின் மகனான டிமிட்ரி பட்ருஷேவ், 2010-2018 வரை வங்கியின் நிர்வாக வாரியத் தலைவராக இருந்தார், இப்போது ரஷ்யாவின் விவசாய அமைச்சராக உள்ளார்.

வங்கி மற்றும் பட்ருஷேவ் குடும்ப உறுப்பினர்கள் இருவரும் மேற்கத்திய தடைகளுக்கு உட்பட்டவர்கள். அமெரிக்க தறைசேரி அமெரிக்கக் குடிமக்கள் வங்கியின் கடன் அல்லது பங்குகளில் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது, ஆனால் அதனுடனான பரிவர்த்தனைகளைத் தடுக்கவில்லை.

ரஷ்யா மீதான அமெரிக்கத் தடைகள் இருந்தபோதிலும் விவசாயப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் தொடர்பான சில பரிவர்த்தனைகளுக்கு கருவூலம் அங்கீகாரம் அளித்துள்ளது. ரஷ்ய முன்மொழிவு குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

ரஷ்யாவின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டால், ரஷ்யாவின் தானிய வர்த்தகத்தில் Rosselkhoz bank இன் பங்கு கணிசமாக விரிவடையும்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அசாத் மௌலானாவிடம் வாக்குமூலம் பதிவு!

தற்போது பிரான்ஸில் உள்ள அசாத் மௌலானாவிடம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்...

யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவது புலிகளை மகிமைப்படுத்துவதாக அமையக்கூடாது!

இலங்கையில் போரினால் உயிரிழந்த பொதுமக்களின் நினைவுகூறுதலில் ஒரு சமச்சீரான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க...

ஈரானின் புதிய தலைவராக்குவதற்காகவே முன்னாள் ஜனாதிபதியின் வீட்டின் மீது தாக்குதல்: இஸ்ரேல், அமெரிக்க திட்டம் பிசுபிசுத்தது!

போரின் தொடக்கத்தில், ஈரானின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதி நெஜாத்தின் தெஹ்ரான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்