யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பகுதியிலுள்ள காணிகளை விடுவிக்க கோரி தெல்லிப்பளை சந்தியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று காலை ஆரம்பமாகியுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் போராட்டம் தற்போது இடம் பெற்று வருகிறது.
போராட்டத்தில் அரசியல்வாதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், மத குருமார்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.




