Pagetamil
இலங்கை

களனி பல்கலைக்கழக பகிடிவதை சம்பவம் பற்றி பொலிசார் விசாரணை!

களனி பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பகிடிவதை சம்பவம் தொடர்பில் கிரிபத்கொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட மாணவர் ஒருவர் பகிடிவதை சம்பவம் தொடர்பில் நேற்று மாலை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று பிற்பகல் 3 மணியளவில் தனது விரிவுரைகளை முடித்துக் கொண்டு விளையாட்டுப் பயிற்சிகளுக்காக சென்று கொண்டிருந்த போது சிரேஷ்ட மாணவர்கள் சிலர் தம்மைத் தடுத்து நிறுத்தியதாக மாணவர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

சிரேஷ்ட மாணவர்கள் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவரின் தோற்றத்தைக் குற்றம் சாட்டியதுடன், தலைமுடி மற்றும் தாடியை இழுத்து, சப்பாத்து அணியக் கூடாது, செருப்புடன் மட்டுமே பல்கலைகழக்கழகம் வர வேண்டும், கைக்கடிகாரம் அணியக் கூடாது என மிரட்டப்பட்டுள்ளார்.

அதற்கு இரண்டாம் ஆண்டு மாணவர் எதிர்ப்பு தெரிவித்ததால், சிரேஷ்ட மாணவர்கள் அவரை பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

முறைப்பாட்டின் பிரகாரம், மூன்று சிரேஷ்ட மாணவர்கள் இரண்டாம் வருட மாணவனின் முகத்திலும் உடலிலும் குத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் ஏழு மாணவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களின் பெயர்கள் தனக்குத் தெரியாது எனவும் முறைப்பாட்டாளர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் சிரேஷ்ட மாணவர்களை அவர்களின் தோற்றத்தின் மூலம் அடையாளம் காண முடியும் என பொலிஸாருக்கு அவர் தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான மாணவனை ராகம வைத்தியசாலையின் நீதி வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய கிரிபத்கொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வடக்கு கிழக்கில் புராதன பௌத்த தளங்களை பாதுகாக்க விசேட திட்டங்கள் – புத்தசாசன அமைச்சர்

east tamil

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

Pagetamil

இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

Pagetamil

புதிய வடிவில் TELL IGP மற்றும் l-need சேவைகள்

Pagetamil

யாழில் மீளவும் சோதனைச் சாவடிகள்: பொது பாதுகாப்பின் மேல் புதிய கேள்விகள்

east tamil

Leave a Comment